விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி மறுபார்வை
2006 ஊழிய ஆண்டுக்கான விசேஷ மாநாட்டு தினத்தில் சபையார் கலந்துகொள்வதற்கு முன்னரும் பின்னரும் ஊழியக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்தாலோசிப்பதற்கு இந்தத் தகவல் பயன்படுத்தப்படும். டிசம்பர் 2004, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 4-ல் குறிப்பிடப்பட்டபடி, மாநாட்டிற்கு முன்னரும் பின்னரும் இதைக் கலந்தாலோசிப்பதற்கு நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்வார். இந்த மறுபார்வையின்போது எல்லா கேள்விகளையும் கேட்க வேண்டும், பேச்சுகளில் கொடுக்கப்பட்ட தகவலை எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கலாம் என்பதன் மீது கவனத்தை ஊன்ற வைக்க வேண்டும்.
காலை நிகழ்ச்சி
1. கண்களை எளிமையாக வைப்பது எதை அர்த்தப்படுத்துகிறது, இன்று அது ஏன் கடினமாக இருக்கிறது? (“ஏன் உங்கள் கண்களை எளிமையாக வைக்க வேண்டும்?”)
2. கண்களை எளிமையாக வைத்திருப்பதனால் நாம் எப்படிப் பயனடைகிறோம்? (“கண்களை எளிமையாக வைத்திருப்பதனால் வரும் ஆசீர்வாதங்கள்”)
3. தீங்கே இல்லாதது போல் தோன்றும் பல காரியங்களில் என்ன ஆபத்து இருக்கிறது? (“பொல்லாத உலகில் கண்களை எளிமையாக வைத்திருத்தல்”)
பிற்பகல் நிகழ்ச்சி
4. ஆவிக்குரிய இலக்குகளை இளைஞர்கள் நாடுவதற்குப் பெற்றோர்களும் மற்றவர்களும் எவ்வாறு உற்சாகப்படுத்தலாம்? (“குறிபார்த்து அம்பு எய்யும் பெற்றோர்கள்,” “ஆவிக்குரிய இலக்குகளை நாடும் இளைஞர்கள்”)
5. யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து நாம் எவ்வாறு முன்னேறலாம்: (அ) தனிப்பட்டவர்களாக? (ஆ) குடும்பமாக? (இ) சபையாக? (“யெகோவாவின் அமைப்போடு முன்னேறுவதில் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்”)