‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
1. ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகம் எதற்காக பிரசுரிக்கப்பட்டது?
1 ஜனவரி 4-ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை பைபிள் படிப்பில் ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புதிய புத்தகத்தைப் படிக்க நாம் எவ்வளவு ஆவலோடு காத்திருக்கிறோம்! யெகோவாவை நேசிக்கிற ஒவ்வொருவருக்காகவும் அந்தப் புத்தகத்தில் ஆளும் குழு எழுதியிருக்கிற கடிதம் பின்வரும் வார்த்தைகளுடன் முடிவடைகிறது: “வாழ்க்கையில் தொடர்ந்து சத்தியத்தின்படி நடக்கவும், ‘முடிவில்லா வாழ்வைப் பெற . . . கடவுளுடைய அன்புக்குப்’ பாத்திரராய் இருக்கவும் இப்பிரசுரம் உங்களுக்கு உதவும் என்பதே எங்களுடைய இருதயப்பூர்வ நம்பிக்கை.”—யூதா 21.”
2. வாழ்க்கையின் எந்தெந்த அம்சங்களில் இந்தப் புதிய புத்தகம் நமக்கு உதவும்?
2 புத்தகத்தில் அடங்கியுள்ள அம்சங்கள்: கூட்டுறவு, பொழுதுபோக்கு, அதிகாரத்தில் உள்ளவர்களை மதிப்பது, தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், திருமணம், பேச்சு, சம்பிரதாயங்கள் போன்ற அம்சங்களில் பைபிள் நியமங்கள் எப்படி உதவுகின்றன? கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் நீதியான உயர்ந்த நெறிமுறைகளுக்கு இசைய நம்முடைய மனசாட்சி உருப்படுத்தப்படும். (சங். 19:7, 8) யெகோவா சிந்திக்கும் விதத்தை அதிகமதிகமாக நாம் புரிந்துகொள்ளும்போது, அவருக்குப் பிரியமானதையே செய்ய வேண்டுமென்ற ஆசை நமக்குள் பொங்கியெழும்; அது, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அவருக்குக் கீழ்ப்படிய நம்மைத் தூண்டும்.—நீதி. 27:11; 1 யோ. 5:3.
3. ஒவ்வொரு வாரப் படிப்பிலும் சிறந்த விதத்தில் பதில் சொல்வதற்கு நாம் ஏன் முயற்சி எடுக்க வேண்டும்?
3 பதில் சொல்லத் தவறாதீர்கள்: நீங்கள் தயாரிக்கும்போது சபையினர் மத்தியில் அவரைப் புகழ்வதற்கு இலக்கு வையுங்கள். (எபி. 13:15) சபையினராக நாம் எல்லாரும் சேர்ந்து இந்தப் புதிய புத்தகத்தைப் படித்து, கலந்தாலோசிப்போம். ஒவ்வொரு வாரமும் குறைவான பாராக்களே சிந்திக்கப்படவிருப்பதால், நாம் நன்கு தயாரித்து வருவதற்கு அது வாய்ப்பளிக்கும்; கற்றுக்கொண்ட குறிப்புகளைச் சொல்ல அது நமக்குத் தைரியத்தை அளிக்கும். நாம் நன்கு தயாரித்து வந்து, சுருக்கமாகப் பதில்களைச் சொல்வது, அன்பு காட்டவும், நற்செயல்கள் செய்யவும் மற்றவர்களைத் தூண்டும்; அதோடு, அந்தக் கலந்தாலோசிப்பு உயிரோட்டமுள்ளதாகவும் தகவல் நிறைந்ததாகவும் இருக்க உதவும். (எபி. 10:24) மேலும், நாம் ஒவ்வொருவரும் பதில்களைச் சொல்லும்போது, நம் சந்தோஷம் அதிகரிக்கும்.
4. யெகோவாவின் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவது ஏன் மிக அவசியம்?
4 இயேசு பூமியில் கழித்த கடைசி இரவன்று, யெகோவாவுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது அவசியம் என்று சொன்னார். (யோவா. 15:10) ‘கடவுளது அன்பு’ புத்தகத்தின் உதவியோடு, பைபிள் நெறிமுறைகளை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கும், ‘கடவுளது அன்புக்குப் பாத்திரராய் இருப்பதற்கும்’ எப்போதையும்விட இப்போது நாம் திடதீர்மானமாய் இருப்போம்.—யூ. 21.