வேற்று மொழிப் பிரசுரங்கள் அவசரமாகத் தேவைப்பட்டால்...
சில சமயம் ஊழியத்தில் நாம் சந்திக்கும் நபர்கள், சபையின் கையிருப்பில் இல்லாத மொழியில் பிரசுரங்கள் ஏதாவது வேண்டுமெனக் கேட்கலாம். உங்களிடம் இன்டர்நெட் வசதியும் பிரின்டரும் இருந்தால் சுமார் 400 மொழிகளில் பிரசுரங்களை பிரின்ட் எடுக்கலாம் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படிச் செய்வதென்று பாருங்கள்...
• www.watchtower.org. என்ற நம்முடைய அதிகாரப்பூர்வமான வெப் சைட்டுக்குப் போங்கள்.
• ‘ஹோம் பேஜின்’ வலது பக்கத்தில் முக்கிய மொழிகளின் பட்டியல் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். மொழிகளின் முழுமையான பட்டியலைப் பார்க்க, பூமிக் கோளப் படத்தின் மீது ‘கிளிக்’ செய்யுங்கள்.
• பின்னர், உங்களுக்குத் தேவையான மொழியை ‘கிளிக்’ செய்யுங்கள். அப்போது, பிரின்ட் எடுத்துக்கொள்ள வசதியாக நீங்கள் கேட்கும் மொழிப் பிரசுரங்களின்—துண்டுப்பிரதிகள், சிற்றேடுகள், கட்டுரைகள் போன்றவற்றின்—பட்டியலை உடைய ஒரு பக்கம் வரும். இந்தப் பக்கம், நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியில் இருக்கும் என்பதால் அந்தத் தலைப்புகள் என்னவென்று உங்களுக்குப் புரியாவிட்டாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
• ஏதாவது ஒரு பிரசுரத்தின் மீது ‘கிளிக்’ செய்யுங்கள். அதிலுள்ள தகவல் ஸ்கிரீனில் தென்படும். பின்பு ‘பிரின்ட்’ ‘ஆப்ஷனை’ ‘கிளிக்’ செய்து ‘பிரின்ட்’ எடுத்துக்கொள்ளலாம்.
சில பிரசுரங்கள் மட்டுமே நம் வெப் சைட்டில் இருக்கின்றன; மற்ற பிரசுரங்களை சபை மூலமாகத்தான் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். பிரசுரத்தைக் கேட்டவரின் ஆர்வத்தைத் தூண்டிய பிறகு, சபையின் பிரசுர இலாக்கா மூலம் பிரசுரங்களை ஆர்டர் செய்து பெறுவதே மிகச் சிறந்தது.