உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/13 பக். 1
  • மாற்றங்கள் செய்யத் தயாரா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மாற்றங்கள் செய்யத் தயாரா?
  • நம் ராஜ்ய ஊழியம்—2013
  • இதே தகவல்
  • ‘எல்லாவற்றையும் நற்செய்திக்காகவே செய்யுங்கள்’
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • கொஞ்ச நேரத்தை இதற்கு ஒதுக்க முடியுமா?
    நம் ராஜ்ய ஊழியம்—2006
  • தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—நன்கு தயாரித்துச் செல்வதன் மூலம்
    நம் ராஜ்ய ஊழியம்—2006
  • நம் ராஜ்ய பிரசங்க வேலையை முன்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2013
km 6/13 பக். 1

மாற்றங்கள் செய்யத் தயாரா?

1. உலக சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருப்பதால் நாம் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது?

1 மாறிக்கொண்டே இருக்கும் உலகக் காட்சியை ஒரு நாடக மேடைக்கு 1 கொரிந்தியர் 7:31 ஒப்பிடுகிறது. உலக சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருப்பதால் நாம் ஊழியம் செய்கிற முறைகளிலும், நேரத்திலும், அணுகுமுறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மாற்றங்கள் செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

2. அமைப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்க நாம் ஏன் மாற்றங்களைச் செய்ய வேண்டும்?

2 நீங்கள் பிரசங்கிக்கும் முறைகள்: மாற்றங்கள் செய்ய கிறிஸ்தவ சபை எப்போதுமே தயாராக இருந்திருக்கிறது. முதல் முறையாக இயேசு தம் சீடர்களைப் பிரசங்க வேலைக்காக அனுப்பியபோது, பயணத்திற்காக உணவுப் பையையோ பணப் பையையோ எடுத்துப்போக வேண்டாம் என்று சொல்லியிருந்தார். (மத். 10:9, 10) ஆனால், அவர்களுக்கு வரவிருந்த எதிர்ப்பையும் பிரசங்க வேலையின் விஸ்தரிப்பையும் முன்னறிந்து, தாம் கொடுத்திருந்த அறிவுரைகளை மாற்றினார். (லூக். 22:36) கடந்த நூற்றாண்டில் வானொலி ஒலிபரப்புகள், ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட கார்கள், சாட்சி அட்டைகள் போன்ற காலத்திற்கேற்ற பிரசங்கிக்கும் முறைகளை யெகோவாவின் அமைப்பு பயன்படுத்தியது. இப்போதெல்லாம் மக்களை வீட்டில் பார்ப்பது அபூர்வம் என்பதால் வீட்டுக்கு வீடு ஊழியத்தோடு பொது ஊழியம் செய்வதற்கும் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி அது நம்மை ஊக்குவிக்கிறது. பகலில் மக்கள் வேலைக்குச் சென்றுவிடுவதால் மாலையில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்படியும் ஊக்குவிக்கிறது. யெகோவாவின் பரம ரதம் அதன் திசையை மாற்றும்போது, நீங்களும் அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்கிறீர்களா?—எசே. 1:20, 21.

3. நம் அணுகுமுறையை மாற்றியமைப்பது எப்படி அதிக பலனளிக்கும்?

3 உங்கள் அணுகுமுறை: உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்கள் எதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்? பொருளாதாரத்தைப் பற்றியா? குடும்பத்தைப் பற்றியா? போரைப் பற்றியா? மக்கள் பொதுவாக எதிர்ப்படுகிற பிரச்சினைகளையும் சூழ்நிலைமைகளையும் பற்றித் தெரிந்திருந்தால்தான் நம்முடைய அணுகுமுறையை அதற்கு ஏற்றாற்போல் தயாரிக்க முடியும். (1 கொ. 9:20-23) வீட்டுக்காரர்கள் தங்கள் கவலைகளைத் தெரிவிக்கும்போது, அப்போதைக்கு ஏதாவது சொல்லிவிட்டு நாம் தயாரித்த அணுகுமுறையையே தொடருவதற்குப் பதிலாக, அவர்களுடைய கவலைகளை மனதில் வைத்து நம் உரையாடலை மாற்றினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்!

4. மாற்றங்களை நாம் ஏன் உடனடியாகச் செய்ய வேண்டும்?

4 இந்த உலகத்தின் இறுதி “காட்சி” வெகு சீக்கிரத்தில் முடிவடையும், அதன்பின் மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும். எனவே, “இன்னும் கொஞ்சக் காலமே மீந்திருக்கிறது.” (1 கொ. 7:29) மீந்திருக்கும் இந்தக் கொஞ்சக் காலத்தில் அதிகம் சாதிக்க, காலம் தாழ்த்தாமல் நாம் உடனடியாக மாற்றங்களைச் செய்வது எவ்வளவு முக்கியம்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்