ஊழியத்தில் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை வெளிக்காட்டுங்கள்
ஊழியத்தில் நாம் சொல்வதை நன்றாக கேட்பவர்களிடம், பைபிளிலிருந்து வசனங்களை வாசித்து காட்டவேண்டும். அப்படி செய்யும்போது கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை நாம் வெளிக்காட்டுகிறோம். போன வருடம் நடந்த விசேஷ மாநாட்டில் அதைப் பற்றி தெரிந்துகொண்டோம். அந்த மாநாட்டில், “ஊழியத்தில் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை வெளிக்காட்டுங்கள்” என்ற பேச்சை வட்டாரக் கண்காணி கொடுத்தார். அந்த பேச்சின் முக்கியக் குறிப்புகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
நம் வார்த்தையைவிட யெகோவாவின் வார்த்தை மிகவும் வல்லமையுள்ளது. எப்படி?—2 தீ. 3:16, 17.
யெகோவாவுடைய வார்த்தை மனதை தூண்டுகிறது, யோசிக்கும் விதத்தை சரிசெய்கிறது, உள்நோக்கத்தை சரிசெய்கிறது, நடந்துகொள்ளும் விதத்தை சரிசெய்கிறது என்று ஏன் சொல்லலாம்?—காவற்கோபுரம், ஜூன் 15, 2012, பக். 27, பாரா 7-ஐ பாருங்கள்.
ஊழியத்தில் வசனத்தை வாசிக்கும்போது, ஜனங்கள் பைபிளுக்கு மரியாதை காட்ட வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?—ஊழியப் பள்ளி புத்தகம் பக். 148, பாரா 3-4, மார்ச் 2013 நம் ராஜ்ய ஊழியம், பக். 9, பாரா 8-ஐ பாருங்கள்.
வசனங்களை விளக்குவதும் நியாயங்காட்டி பேசுவதும் ஏன் முக்கியம்? அதை நாம் எப்படி செய்யலாம்?—அப். 17:2, 3; ஊழியப் பள்ளி புத்தகம் பக். 154, பாரா 4-ல் இருந்து பக். 156, பாரா 5 வரை பாருங்கள். ஊழியத்தில் பைபிளை பயன்படுத்தும்போது நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்கலாம்?—மத். 10:16; ஏப்ரல் 2008 நம் ராஜ்ய ஊழியம், பக். 5-ஐ பாருங்கள்.