ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... எப்படிப் பேசலாம் என்று நீங்களே தயாரியுங்கள்
ஏன் முக்கியம்:“இப்படிப் பேசலாம்” என்ற பகுதியில் ஊழியத்திற்கு பிரயோஜனமான குறிப்புகள் இருக்கிறது. ஆனால், அங்கிருக்கும் அதே வார்த்தைகளைப் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதைப் பயன்படுத்தி வேறு விதமாக நீங்கள் பேச விரும்பலாம். இல்லை என்றால், ஊழியம் செய்யும் இடத்திற்கு பொருத்தமான வேறு விஷயத்தைப் பேச விரும்பலாம். அதற்கு, நீங்கள் என்ன செய்யலாம்? துண்டுப்பிரதியை வாசியுங்கள்; “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் குறிப்புகளைப் பாருங்கள்; அது சம்பந்தமான வீடியோக்களையும் பாருங்கள். பிறகு, கீழே இருக்கும் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரியுங்கள்.—km 2/08 பக். 10.
எப்படி செய்வது?
“‘இப்படிப் பேசலாம்’ பகுதியில் இருக்கும் குறிப்பையே பயன்படுத்த விரும்புகிறேனா?”
ஆம்
பேச்சை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை தயாரியுங்கள். வணக்கம் சொல்லிவிட்டு ஏன் அவர்களை சந்திக்கிறீர்கள் என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லுங்கள். (உதாரணம்: “நான் ஏன் உங்கள பார்க்க வந்திருக்கேன்னா. . . ”)
வாசிக்கும் வசனத்தையும், கொடுக்கும் புத்தகத்தையும் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்பதை யோசித்துப் பாருங்கள் (உதாரணம்: ஒரு வசனத்தை அறிமுகப்படுத்த இப்படிச் சொல்லலாம்: “இந்த கேள்விக்கான பதில பைபிள்ல இருந்து உங்களுக்கு காட்ட விரும்புறேன்.”)
இல்லை
ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க கடைசியில் என்ன கேள்வியைக் கேட்கலாம் என்று தயாரியுங்கள்
நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பதை ஞாபகம் வைப்பதற்கு சில குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்
நீங்கள் ஊழியம் செய்யும் இடத்திற்கு பொருத்தமான அல்லது உங்களுக்கு பிடித்த குறிப்பை துண்டுப்பிரதியில் இருந்து தேர்ந்தெடுங்கள்
ஊழியத்தில் பார்க்கும் நபரின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் என்ன கேள்வியைக் கேட்கலாம் என்று தயாரியுங்கள். ஆனால், அவரை தர்மசங்கடப்படுத்தும் விதத்தில் கேள்விகளைக் கேட்காதீர்கள். (உதாரணம்: துண்டுப்பிரதிகளின் தலைப்பை பயன்படுத்தலாம்.)
நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் கடைசியில் இந்த இரெண்டு விஷயங்களை செய்யுங்கள்
வாசிக்க ஒரு வசனத்தை தேர்ந்தெடுங்கள்
நீங்கள் கொடுக்கும் துண்டுப்பிரதியை படிப்பதால் அந்த நபருக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை சுருக்கமாக சொல்லுங்கள்