பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 22–24
யெகோவாவை ‘புரிந்துகொள்ளும் இதயம்’ உங்களுக்கு இருக்கிறதா?
யெகோவா மக்களை அத்திப் பழங்களுக்கு ஒப்பிட்டார்
பாபிலோனுக்கு அடிமைகளாக கொண்டுபோகப்பட்ட யூதர்களில் சிலர் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். அவர்கள் நல்ல அத்திப் பழங்களைப்போல் இருந்தார்கள்
உண்மையில்லாத சிதேக்கியா ராஜாவும் கெட்ட காரியங்களை செய்துவந்த மற்றவர்களும் அழுகிப்போன அத்திப் பழங்களைப்போல் இருந்தார்கள்
யெகோவாவை ‘புரிந்துகொள்ளும் இதயம்’ நமக்கு இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
பைபிளைப் படித்து அதன்படி நடந்தால், தன்னைப் பற்றி புரிந்துகொள்ள யெகோவா நமக்கு உதவி செய்வார்.
நம் இதயத்தில் எப்படிப்பட்ட எண்ணங்கள் இருக்கிறது என்று அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டும். யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை கெடுக்கிற எண்ணங்களையும் ஆசைகளையும் நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்