உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 அக்டோபர் பக். 7
  • யெகோவாவைப் புகழ்வதற்காகவே வாழுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவைப் புகழ்வதற்காகவே வாழுங்கள்!
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • தாலந்து உதாரணம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • இப்போது இருக்கும் பொறுப்புகளைச் சந்தோஷமாக செய்யுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • கடவுளை சேவிக்க எது உங்களைத் தூண்டுகிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • நீங்கள் ‘சந்தோஷப்பட’ காரணம்
    நம் ராஜ்ய ஊழியம்—2012
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 அக்டோபர் பக். 7

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவைப் புகழ்வதற்காகவே வாழுங்கள்!

உயிர் ஒரு அருமையான பரிசு! அதை எந்தளவுக்கு மதிக்கிறோம் என்பதை நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் காட்டலாம். உயிரின் ஊற்றாகிய யெகோவாவை மகிமைப்படுத்துவதற்காக, அவருடைய சாட்சிகளாகிய நாம் நம்முடைய திறமைகளைப் பயன்படுத்த கடினமாக முயற்சி செய்கிறோம். (சங் 36:9; வெளி 4:11) ஆனாலும், இந்தப் பொல்லாத உலகத்தில் தினமும் நமக்கு ஏற்படுகிற கவலைகளால், ஆன்மீகக் காரியங்களை நாம் எளிதில் அசட்டை செய்துவிடலாம். (மாற் 4:18, 19) அதனால், ‘நான் உண்மையாவே என்னால முடிஞ்ச மிகச் சிறந்தத யெகோவாவுக்கு கொடுக்கறேனா? (ஓசி 14:2) நான் யெகோவாவுக்கு செய்யும் சேவைய என்னோட வேலை எந்தளவுக்கு பாதிக்குது? என்னோட ஆன்மீக லட்சியங்கள் என்ன? நான் எப்படி இன்னும் அதிகமா ஊழியம் செய்யலாம்?’ என்றெல்லாம் நம்மையே நாம் கேட்டுக்கொள்வது நல்லது. நீங்கள் முன்னேற்றம் செய்ய வேண்டியிருந்தால், உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு, தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். தினமும் யெகோவாவைப் புகழ்வது, திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ வழிசெய்யும் என்பதில் சந்தேகமே இல்லை!—சங் 61:8.

ஒரு மேடை நிகழ்ச்சியில் எட்கர்டொ ஃப்ரான்கொ; வெளி ஊழியத்தில் எட்கர்டொ ஃப்ரான்கொ

உங்கள் திறமைகளை யாருக்காகப் பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் திறமைகளை யெகோவாவுக்காக பயன்படுத்துங்கள் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • உங்கள் திறமைகளைச் சாத்தானின் உலகத்துக்காகப் பயன்படுத்துவது ஏன் புத்திசாலித்தனம் அல்ல? (1யோ 2:17)

  • யெகோவாவுக்காக மிகச் சிறந்ததைக் கொடுப்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன?

  • பரிசுத்த சேவையின் எந்த அம்சங்களுக்காக உங்கள் திறமைகளை நீங்கள் பயன்படுத்தலாம்?

குடும்ப வழிபாட்டுக்கான ஆலோசனைகள்:

  • நிறைய வருஷங்களாக, ஒருவேளை முழுநேர ஊழியராக, யெகோவாவுக்குச் சேவை செய்திருக்கும் ஒரு சகோதரரை அல்லது சகோதரியை அழைத்து, அவர்களிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேளுங்கள்: யெகோவாவுக்குச் சிறந்ததைக் கொடுக்க அவர் என்ன தியாகங்களைச் செய்திருக்கிறார்? யெகோவா அவரை எப்படி ஆசீர்வதித்திருக்கிறார்?

  • JW பிராட்காஸ்டிங்கில், பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள். பரிசுத்த சேவையின் வெவ்வேறு அம்சங்களில் தங்கள் வாழ்நாளைச் செலவிட்டவர்களின் சந்தோஷமான அனுபவங்களைப் பாருங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்