உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 மே பக். 8
  • “கடவுள் இணைத்து வைத்ததை . . .”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கடவுள் இணைத்து வைத்ததை . . .”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • கடவுள் ஏற்படுத்திய திருமண பந்தத்தை மதியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • விவாகரத்து—வேறு வழியே இல்லையா?
    விழித்தெழு!—2004
  • வாசகர் கேட்கும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 மே பக். 8
ஒரு ஆணும் பெண்ணும் கைகோர்த்திருக்கிறார்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“கடவுள் இணைத்து வைத்ததை . . .”

ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன், விவாகரத்துப் பத்திரத்தைத் தயார் செய்ய வேண்டும் என்று திருச்சட்டம் சொல்லியிருந்தது. மக்கள் அவசரப்பட்டு விவாகரத்து செய்வதைத் தடுக்க இது உதவியது. ஆனால் இயேசுவின் காலத்தில், விவாகரத்து செய்வதை மதத் தலைவர்கள் சுலபமாக்கினார்கள். எந்தக் காரணத்துக்காக வேண்டுமானாலும் மனைவியை விவாகரத்து செய்ய முடிந்தது. (“விவாகரத்துப் பத்திரத்தை” என்ற மாற் 10: 4-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; “மனைவியை விவாகரத்து செய்துவிட்டு,” “மனைவிக்குத் துரோகம் செய்கிறான்” என்ற மாற் 10: 11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்) திருமண ஏற்பாட்டை ஆரம்பித்தவரும், அதை அங்கீகரித்தவரும் யெகோவாதான் என்பதை இயேசு குறிப்பிட்டார். (மாற் 10:2-12) கணவனும் மனைவியும் “ஒரே உடலாக” இருப்பார்கள் என்று சொன்னார். இதன் மூலம், அந்தப் பந்தம் நிரந்தரமானது என்பதைக் காட்டினார். மத்தேயு புத்தகத்தில் இருக்கிற இணைவசனம், ‘பாலியல் முறைகேடு’ ஒன்றுதான் விவாகரத்து செய்வதற்கான ஒரே வேதப்பூர்வ காரணம் என்பதைக் காட்டுகிறது.—மத் 19:9.

திருமணத்தைப் பொறுத்தவரை, இன்று நிறையப் பேருக்குப் பரிசேயர்களின் மனநிலைதான் இருக்கிறது, இயேசுவைப் போல அவர்கள் யோசிப்பதில்லை. இந்த உலகத்தில் இருக்கிற பலர், பிரச்சினைக்கு ஒரே தீர்வு விவாகரத்துதான் என்று நினைக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவத் தம்பதிகள் அப்படி நினைப்பதில்லை; திருமண ஒப்பந்தத்தை அவர்கள் மிக மிக முக்கியமானதாக நினைக்கிறார்கள். பிரச்சினைகள் வந்தால், பைபிளின் உதவியோடு அதைச் சரிசெய்யப் பார்க்கிறார்கள். அன்பும் மரியாதையும் திருமண பந்தத்தைப் பாதுகாக்கும் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ஒருவர் பைபிளைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்; மனைவி சொல்வதை கணவன் காது கொடுத்துக் கேட்கிறார்; திருமணத்தின்போது எடுத்த புகைப்படம் கிழிந்திருக்கிறது

    உங்கள் மணவாழ்க்கையில் நீதிமொழிகள் 15:1-ன்படி எப்படி நடந்துகொள்ளலாம்? இது ஏன் முக்கியம்?

  • நீதிமொழிகள் 19:11-ன்படி நடந்துகொள்வதன் மூலம் பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம்?

  • உங்கள் திருமண பந்தம் முறிகிற நிலையில் இருந்தால், ‘விவாகரத்து செய்வதைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக என்னென்ன கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்?

  • நீங்கள் ஒரு நல்ல கணவராக அல்லது மனைவியாக இருப்பதற்கு, மத்தேயு 7:12 எப்படி உதவும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்