பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 கொரிந்தியர் 11-13
பவுலின் “உடலில் ஒரு முள்”
முள் என்ற வார்த்தையை அடையாள அர்த்தத்தில் பைபிள் அடிக்கடி பயன்படுத்துகிறது. மற்றவர்களைக் காயப்படுத்துகிற அல்லது மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்கிற மக்களையோ, பிரச்சினைகளை ஏற்படுத்துகிற விஷயங்களையோ குறிப்பதற்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். (எண் 33:55; நீதி 22:5; எசே 28:24) தன் “உடலில் ஒரு முள்” இருப்பதாக பவுல் எழுதியபோது, போலி அப்போஸ்தலர்களை மனதில் வைத்து அப்படி எழுதியிருக்கலாம். அதோடு, அவர் அப்போஸ்தலர்தானா என்று சந்தேகப்பட்டு அவருடைய வேலையைக் குறைசொன்ன ஆட்களை மனதில் வைத்தும் அப்படி எழுதியிருக்கலாம். பவுலின் ‘உடலில் இருந்த முள்’ வேறு எதையும் குறிக்கலாம், அதைப் பற்றி கீழே இருக்கிற வசனங்கள் என்ன காட்டுகின்றன?
உங்கள் ‘உடலில் இருக்கும் முள்’ என்ன?
சகித்திருக்க நீங்கள் எப்படி யெகோவாவைச் சார்ந்திருக்கலாம்?