பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 தெசலோனிக்கேயர் 1-5
“எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்”
கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவராலும் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும். உதாரணத்துக்கு, உடல்நலப் பிரச்சினைகளால் அல்லது மற்ற பிரச்சினைகளால் ‘மிகவும் போராடிக்கொண்டிருந்தாலும்,’ நாம் தவறாமல் கூட்டங்களுக்கு வரும்போதும் ஊழியத்தில் கலந்துகொள்ளும்போதும் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறோம். (1தெ 2:2, அடிக்குறிப்பு) அதோடு, சகோதர சகோதரிகளிடம் ஆறுதலாகப் பேசுவதன் மூலமும் அவர்களை நாம் உற்சாகப்படுத்தலாம். அதற்கு, முன்கூட்டியே யோசிப்பதும், ஒருவேளை ஆராய்ச்சி செய்வதும்கூட உதவும்.
ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் இருப்பவரை உற்சாகப்படுத்துவதற்குத் தேவையான தகவல்கள் எங்கே இருக்கின்றன?
உங்கள் சபையிலுள்ள யாரை உற்சாகப்படுத்த நீங்கள் விரும்புகிறீர்கள்?