கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“அவற்றையே யோசித்துக்கொண்டிருங்கள்”
எவற்றையே? உண்மையானவை, அதிமுக்கியமானவை, நீதியானவை, சுத்தமானவை, விரும்பத்தக்கவை, மெச்சத்தக்கவை, ஒழுக்கமானவை, பாராட்டுக்குரியவை ஆகியவற்றையே யோசித்துக்கொண்டிருக்கும்படி பிலிப்பியர் 4:8 சொல்கிறது. அதற்காக, பைபிளில் இருக்கும் விஷயங்களை மட்டும்தான் கிறிஸ்தவர்கள் யோசிக்க வேண்டும் என்பதில்லை. இருந்தாலும், நம் இதயத்தின் யோசனைகள் யெகோவாவுக்குப் பிரியமானதாக இருக்க வேண்டும். நாம் யோசிக்கும் விஷயங்கள், அவருக்கு நாம் உண்மையாக நிலைத்திருப்பதை ஒரு சவாலாக ஆக்கிவிடக் கூடாது.—சங் 19:14.
கெட்ட யோசனைகளைத் தவிர்ப்பது கஷ்டம்தான். நம்முடைய பாவ இயல்போடு மட்டுமல்ல, ‘இந்த உலகத்தின் கடவுளான’ சாத்தானோடும் நாம் போராட வேண்டியிருக்கிறது. (2கொ 4:4) இந்த உலகத்திலுள்ள மீடியாக்கள் அவன் கையில் இருக்கின்றன; அதனால்தான் டிவி, ரேடியோ, இன்டர்நெட், புத்தகங்கள் என எதை எடுத்தாலும் தரம்கெட்ட விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. நம் மனதை என்ன விஷயங்களால் நிரப்புகிறோம் என்பதில் நாம் கவனமாக இல்லாவிட்டால் நம் யோசனை கெட்டுவிடும், கடைசியில் நம் நடத்தையும் மோசமாகிவிடும்.—யாக் 1:14, 15.
உண்மையாக இருப்பதை கெடுக்கும் விஷயங்கள்—மோசமான பொழுதுபோக்கு என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
ஒரு சகோதரர் தன்னுடைய ஃபோனில் எதைப் பார்த்துக்கொண்டிருந்தார், அது எப்படி அவரைப் பாதித்தது?
கலாத்தியர் 6:7, 8 மற்றும் சங்கீதம் 119:37 எப்படி அவருக்கு உதவி செய்தன?