பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 12-14
நன்மையளிக்கும் ஓர் ஒப்பந்தம்
ஆபிரகாமோடு யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்தார்; பரலோக அரசாங்கம் கண்டிப்பாக வரும் என்று இது உறுதியளித்தது; அதோடு, இயேசுவும் அவருடைய உடன் அரசர்களும் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வதற்கான வழியைத் திறந்து வைத்தது
கி.மு. 1943-ல், அதாவது கானானுக்குப் போகும் வழியில் யூப்ரடிஸ் ஆற்றை ஆபிரகாம் கடந்தபோது, இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததாகத் தெரிகிறது
மேசியானிய அரசாங்கம் கடவுளுடைய எதிரிகளை அழித்து, பூமியிலுள்ள எல்லாருக்கும் ஆசீர்வாதங்களைக் கொடுக்கும்வரை, இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்
பலமான விசுவாசத்தைக் காட்டியதற்காக ஆபிரகாமை யெகோவா ஆசீர்வதித்தார். நாமும் அவரைப் போல விசுவாசத்தைக் காட்டும்போது, ஆபிரகாமோடு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?