பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 13-14
“தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்”
யெகோவா நம்மை புரிந்துகொள்கிற, அக்கறையான மீட்பர். இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்து கூட்டிக்கொண்டு போனபோது அவர்களை எப்படி அக்கறையாகக் கவனித்துக்கொண்டார்?
அவர்களைச் சீராக வழிநடத்தினார்.—யாத் 13:18
அவர்களுக்கு வழிநடத்துதலையும் பாதுகாப்பையும் கொடுத்தார்.—யாத் 14:19, 20
குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரை எல்லாரையும் விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தார்.—யாத் 14:29, 30
மிகுந்த உபத்திரவம் வரப்போகிற இந்தக் காலத்தில் நீங்கள் என்ன நம்பிக்கையோடு இருக்கலாம்?—ஏசா 30:15