கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பயனியர் ஊழியம் செய்யுங்கள், யெகோவாவைப் புகழுங்கள்
யெகோவாவைப் புகழ இஸ்ரவேலர்களுக்கு நல்ல நல்ல காரணங்கள் இருந்தன. யெகோவா அவர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார். பார்வோனின் படையிடமிருந்தும் காப்பாற்றினார். (யாத் 15:1, 2) இன்றுவரை தன்னுடைய மக்களுக்கு யெகோவா நல்லது செய்துகொண்டிருக்கிறார். நாம் எப்படி அவருக்கு நன்றி காட்டலாம்?—சங் 116:12.
அதற்கு ஒரு வழி, துணைப் பயனியராகவோ ஒழுங்கான பயனியராகவோ சேவை செய்வது. பயனியர் ஊழியம் செய்வதற்கான ஆர்வத்தையும் பலத்தையும் கேட்டு நீங்கள் ஜெபம் செய்யலாம். (பிலி 2:13) சிலர் முதலில், துணைப் பயனியர் ஊழியம் செய்கிறார்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் வட்டாரக் கண்காணி சந்திக்கிற மாதங்களிலும் நீங்கள் 30 அல்லது 50 மணிநேரங்கள் பயனியர் ஊழியம் செய்யலாம். துணைப் பயனியர் சேவையில் கிடைக்கும் சந்தோஷத்தை நீங்கள் ருசித்துப் பார்த்த பிறகு ஒழுங்கான பயனியர் சேவை செய்ய நீங்கள் முயற்சி எடுக்கலாம். முழு நேரமாக வேலை செய்பவர்களும், உடல்நலம் சரியில்லாதவர்களும்கூட ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள். (mwb16.07 பக். 8) யெகோவாவைப் புகழுவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் எடுக்கலாம். ஏனென்றால், அதையெல்லாம் பெற்றுக்கொள்வதற்கான முழுமையான தகுதி அவருக்கு இருக்கிறது!—1நா 16:25.
மங்கோலியாவில் மூன்று சகோதரிகள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
பயனியர் ஊழியத்தை ஆரம்பிப்பதில் இந்த மூன்று சகோதரிகளுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன?
அவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன?
ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்ததால் யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய வேறு என்ன வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைத்தன?
இவர்களுடைய முன்மாதிரி மற்றவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?