உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 செப்டம்பர் பக். 4
  • வழிபாட்டுக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான பொருள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வழிபாட்டுக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான பொருள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • “வரப்போகிற நன்மைகளின் . . . நிழல்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • பிராயச்சித்த மூடி
    சொல் பட்டியல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • ஒப்பந்தப் பெட்டி என்பது என்ன?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 செப்டம்பர் பக். 4
ஒப்பந்தப் பெட்டி.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 25-26

வழிபாட்டுக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான பொருள்

25:9, 21, 22

வழிபாட்டுக் கூடாரத்துக்கும் சரி, இஸ்ரவேலர்களின் முகாமுக்கும் சரி, ஒப்பந்தப் பெட்டி மிக முக்கியமான பொருளாக இருந்தது. அந்தப் பெட்டியின் பிராயச்சித்த மூடிக்குமேல் இரண்டு கேருபீன்கள் இருந்தன. அவற்றுக்கு நடுவில் தோன்றிய மேகம் கடவுளுடைய பிரசன்னத்தைக் குறித்தது. ஒவ்வொரு வருஷமும் பாவப் பரிகார நாளில், தலைமைக் குரு மகா பரிசுத்த அறைக்குள் சென்றார். அங்கிருந்த பெட்டியின் மூடிக்கு முன்னால் இஸ்ரவேலர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக காளையின் இரத்தத்தையும் வெள்ளாட்டின் இரத்தத்தையும் தெளித்தார். (லேவி 16:14, 15) மிகப் பெரிய தலைமைக் குருவாகிய இயேசு, பரலோகத்துக்குப் போய் யெகோவாவுக்கு முன்னால் தன்னுடைய மீட்பு பலியின் மதிப்பைக் கொடுத்ததுக்கு இது படமாக இருந்தது.—எபி 9: 24-26.

இந்த வசனங்களையும் மீட்பு பலியால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளையும் பொருத்திக் காட்டுங்கள்:

வசனங்கள்

  • 1யோ 1:8, 9

  • எபி 9:13, 14

  • ரோ 6:23

நன்மைகள்

  • என்றென்றும் வாழும் நம்பிக்கை

  • பாவங்களுக்கான மன்னிப்பு

  • சுத்தமான மனசாட்சி

இந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்