கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுளுடைய சக்தியின் உதவியோடு செய்து முடிக்கப்பட்ட அசாத்திய வேலை
அந்தக் காலத்திலிருந்தே, கடவுளுடைய ஊழியர்கள் பிரமாண்டமான வேலைகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய திறமையால் அல்ல, யெகோவாவுடைய உதவியால்தான் அவற்றைச் செய்ய முடிந்தது. 1954-ல், தி நியு வல்டு சொஸைட்டி இன் ஆக்ஷன் என்ற படத்தைத் தயாரித்தார்கள். படத் தயாரிப்பில் முன்அனுபவம் இல்லாத பெத்தேல் ஊழியர்கள் அதைத் தயாரித்தார்கள். யெகோவாவின் சக்தியால்தான் அசாத்தியமான அந்த வேலை சாத்தியமானது! நமக்கும் ஏதாவது சவாலான நியமிப்பு கிடைக்கும்போது, நாம் யெகோவாவை நம்பியிருந்தால், நிச்சயம் அதை நல்லபடியாக செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இதிலிருந்து கிடைக்கிறது.—சக 4:6.
“தி நியு வல்டு சொஸைட்டி இன் ஆக்ஷன்”—திரைக்குப் பின்னால்! என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
உலகத் தலைமை அலுவலகத்தைப் பற்றி படம் எடுக்கலாம் என்று ஏன் முடிவெடுத்தார்கள்?
பெத்தேல் என்பது, மனித உடல் போன்றது என்பதை இந்த வீடியோ எப்படிக் காட்டுகிறது?—1கொ 12:14-20.
இந்தப் படத்தைத் தயாரிப்பதில் சகோதரர்களுக்கு என்னென்ன சவால்கள் இருந்தன, அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்?
இந்தப் படத் தயாரிப்பிலிருந்து யெகோவாவுடைய சக்தியைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?