உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp24 எண் 1 பக். 6-9
  • பைபிள்​—நம்பகமான வழிகாட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள்​—நம்பகமான வழிகாட்டி
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நமக்கான வழிகாட்டி—கடவுள்
  • கடவுளுடைய வழிகாட்டுதல்—பைபிளில்
  • குடும்பத்துக்குக் கூடுதலான உதவி
    விழித்தெழு!—2018
  • நிறைவான வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறதா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • முடிவு எடுப்பது இனி உங்கள் கையில்!
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
  • தன்னியல்பைவிட மேம்பட்ட வழிகாட்டி
    விழித்தெழு!—2007
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
wp24 எண் 1 பக். 6-9

பைபிள்—நம்பகமான வழிகாட்டி

நமக்கு சரியென படுவதை அல்லது மற்றவர்களுக்கு சரியென படுவதை வைத்து முடிவுகள் எடுத்தோம் என்றால், அது எல்லா சமயத்திலும் நல்ல முடிவாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கான காரணம் பைபிளில் இருக்கிறது. அதுமட்டுமல்ல நல்ல முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகள் பைபிளில்தான் இருக்கின்றன. அவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.

நமக்கான வழிகாட்டி—கடவுள்

ஒரு மனுஷனுக்கு இன்னொரு மனுஷன் வழிகாட்ட முடியாது. ஏனென்றால், யெகோவாa நம்மை அப்படிப் படைக்கவில்லை என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 10:23) நமக்குக் கண்டிப்பாக யெகோவாவுடைய உதவி தேவை. அதனால்தான், அவர் பைபிள் மூலமாக நமக்கு நல்ல ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார். யெகோவா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார். வாழ்க்கையில் நாம் ஏதாவது தவறான முடிவை எடுத்துவிட்டு, வேதனையையோ கஷ்டத்தையோ அனுபவிக்க கூடாதென்று அவர் நினைக்கிறார். (உபாகமம் 5:29; 1 யோவான் 4:8) எல்லாவற்றுக்கும் மேலாக அவர்தான் நம்மை படைத்தவர். அவருக்கு நிறைய ஞானமும் அறிவும் இருக்கிறது. இருப்பதிலேயே சிறந்த ஆலோசனையை அவரால் மட்டும்தான் கொடுக்க முடியும். (சங்கீதம் 100:3; 104:24) ஆனால், அவர் சொல்கிற மாதிரிதான் வாழ வேண்டுமென்று யாரையும் அவர் கட்டாயப்படுத்துவது கிடையாது.

முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா கொடுத்திருந்தார். (ஆதியாகமம் 1:28, 29; 2:8, 15) அதோடு, சில விஷயங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர்களைக் கடவுள் கட்டாயப்படுத்தவில்லை. கீழ்ப்படியலாமா வேண்டாமா என்று அவர்களே முடிவெடுப்பதற்கு சுதந்திரம் கொடுத்தார். (ஆதியாகமம் 2:9, 16, 17) வருத்தமான விஷயம் என்னவென்றால் ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். (ஆதியாகமம் 3:6) அன்றும் சரி, இன்றும் சரி, மனிதர்கள் தங்களுக்கு சரியென படுவதைத்தான் செய்கிறார்கள். அது அவர்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறதா? இல்லை. கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் உண்மையான சந்தோஷமும் நிம்மதியும் இருக்காது என்பதை மனிதர்களுடைய சரித்திரம் தெளிவாகக் காட்டுகிறது.—பிரசங்கி 8:9.

நாம் யாராக இருந்தாலும் சரி, எங்கே வாழ்ந்தாலும் சரி, வாழ்க்கையில் நல்ல முடிவுகள் எடுப்பதற்கு பைபிள் நமக்கு உதவி செய்கிறது. (2 தீமோத்தேயு 3:16, 17; “எல்லா விதமான மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) பைபிள் எப்படி உதவும் என்று பார்க்கலாம்.

பைபிளை “கடவுளுடைய வார்த்தை” என்று சொல்வதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:13. jw.org-ல் “பைபிளின் நூலாசிரியர் யார்?” என்ற வீடியோவைப் பாருங்கள்.

எல்லா விதமான மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்

நம்மைப் படைத்த கடவுள் அன்பானவர், ஞானமானவர். அதனால், எல்லா மக்களுக்கும் அவருடைய ஆலோசனைகள் கிடைக்கிற மாதிரி அவர் செய்ய வேண்டும் என்றுதானே நாம் எதிர்பார்ப்போம்! பைபிள் எல்லாருக்கும் கிடைக்கிறதா? சில உண்மைகளைப் பார்க்கலாம்.

வேறு வேறு நாட்டை சேர்ந்த மக்கள் பைபிளைப் படிக்கிறார்கள். விதவிதமான பைபிள்கள் புத்தக வடிவிலும் டிஜிட்டல் வடிவிலும் முன்புறத்தில் காட்டப்பட்டுள்ளது.
  • 3,500+ மொழிகளில் பைபிளுடைய ஒரு பகுதியாவது கிடைக்கிறது. உலகத்தில் வேறெந்த புத்தகமும் இத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை.

  • 500,00,00,000+ பைபிள்கள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. சரித்திரத்திலேயே வேறெந்த புத்தகமும் இவ்வளவு அதிகமாக அச்சடிக்கப்படவில்லை.

பைபிள் எந்தவொரு இனத்தையோ, தேசத்தையோ, கலாச்சாரத்தையோ உயர்த்தி பேசுவதில்லை. அது உண்மையிலேயே எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்.

jw.org-ல் (250-க்கும் அதிகமான மொழிகளில்) ஆன்லைனிலேயே பைபிளைப் படியுங்கள்.

ஒரு நபர் தன்னுடைய பைபிளில் விரல் வைத்து படித்துக்கொண்டிருக்கிறார்.

ஏன் சிலர் பைபிளை ஏற்றுக்கொள்வதில்லை

பைபிளில் இருக்கும் ஆலோசனைகள் நம் வாழ்க்கைக்கு உதவாது என்று சிலர் நினைக்கிறார்கள். அதற்கு சில காரணங்களையும் சொல்கிறார்கள்.

சிலர் சொல்கிறார்கள்: “பைபிள் சில விஷயங்களை மாத்தி மாத்தி சொல்கிறது.”

உண்மை என்னவென்றால்: பைபிளை மேலோட்டமாகப் படித்தால் நமக்கும் அதே மாதிரி தோன்றலாம். ஆனால், அந்த விஷயங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் எழுதப்பட்டது, எதற்காக எழுதப்பட்டது என்பதையெல்லாம் நாம் தெரிந்துகொண்டால் பைபிள் எதையும் மாத்தி மாத்தி சொல்வதில்லை என்பதைப் புரிந்துகொள்வோம்.

சில உதாரணங்களைத் தெரிந்துகொள்ள jw.org-ல் “பைபிளில் முரண்பாடுகள் இருக்கின்றனவா?” என்ற கட்டுரையைப் படியுங்கள்.

சிலர் சொல்கிறார்கள்: “பைபிளைப் படிக்கிற சிலரே தவறான விஷயங்களை செய்கிறார்கள். அதனால், பைபிள் நல்லதைக் கற்றுத்தரும் புத்தகம் என்று சொல்ல முடியாது.”

உண்மை என்னவென்றால்: பைபிளைப் படிக்கிற சிலர் அதில் சொல்லியிருப்பதுபோல் நடக்கவில்லை என்றால் அதற்காக பைபிளைக் குறை சொல்ல முடியாது. சொல்லப்போனால், மதத் தலைவர்கள் உட்பட நிறைய பேர் பைபிள்படி நடப்பதாக சொல்லிக்கொள்வார்கள்; ஆனால், அதன்படி செய்ய மாட்டார்கள் என்றும்... அதற்காக மக்கள் பைபிளை ‘பழித்துப் பேசுவார்கள்’ என்றும்... பைபிளே சொல்கிறது.—2 பேதுரு 2:1, 2.

நிறைய மதத் தலைவர்கள் என்னென்ன வழிகளில் பைபிளுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு உதாரணத்தைத் தெரிந்துகொள்ள, jw.org-ல் “மதம் என்ற முகமூடியில் மறைந்திருக்கும் வியாபாரம்” என்ற கட்டுரையைப் படியுங்கள்.

சிலர் சொல்கிறார்கள்: “பைபிளைப் படிக்கிறவர்கள், பைபிளைப் படிக்காத மக்களைக் கேவலமாகப் பார்க்கிறார்கள், அவர்களை மதிப்பதில்லை.”

உண்மை என்னவென்றால்: மற்றவர்களை மதிக்க வேண்டுமென்று பைபிள் சொல்லித்தருகிறது. கீழே கொடுக்கப்பட்டிருப்பதுபோல் நடந்துகொள்வது தவறு என்றும் கண்டிக்கிறது.

  • மற்றவர்களைவிட நம்மை ரொம்ப உயர்வாக நினைத்துக்கொள்வது.—பிலிப்பியர் 2:3.

  • மற்ற மதத்தை அல்லது நம்பிக்கையை சேர்ந்தவர்களை மதிக்காமல் இருப்பது.—1 பேதுரு 2:17.

  • நாம் சரி என்று நினைப்பதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது.—மத்தேயு 10:14.

மக்களிடம் கடவுள் எப்போதும் அன்பாக, நியாயமாக நடப்பதாக பைபிள் சொல்கிறது. நாமும் அதேபோல இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.—ரோமர் 9:14.

இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “வித்தியாசமானவர்களை வெறுக்காமல் இருக்க—பைபிள் எப்படி உதவி செய்யும்” என்ற கட்டுரையை jw.org-ல் பாருங்கள்.

கடவுளுடைய வழிகாட்டுதல்—பைபிளில்

மனிதர்களைக் கடவுள் ஆரம்பத்திலிருந்தே எப்படியெல்லாம் வழிநடத்தியிருக்கிறார் என்பதைப் பற்றி பைபிளில் இருக்கிறது. பைபிளை நாம் படிக்கும்போது நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று கடவுள் சொல்லியிருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் எல்லாம் எப்போதும் சரியாகத்தான் இருக்கும். (சங்கீதம் 19:7, 11) நம் வாழ்க்கையில் நல்ல முடிவுகள் எடுப்பதற்கும் உதவி செய்யும்.

உதாரணத்துக்கு, நீதிமொழிகள் 13:20-ல் சொல்லியிருக்கிற ஆலோசனையைப் பாருங்கள். “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்” என்று அந்த வசனம் சொல்கிறது. பைபிள் காலங்களில் மட்டுமல்ல, நம் காலத்துக்கும் இந்த ஆலோசனை பொருந்தும். நமக்கு ரொம்பவே தேவைப்படுகிற இந்த மாதிரி முத்தான ஆலோசனைகள் பைபிளில் நிறைய இருக்கின்றன.—“நம் காலத்துக்கும் கைகொடுக்கும் பைபிள் ஆலோசனைகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

ஒருவேளை நீங்கள் இப்படி யோசிக்கலாம்: ‘பைபிளில் இருக்கும் ஆலோசனைகள் எல்லாம் உண்மையிலேயே எனக்கு உதவும் என்று நான் எப்படி நம்புவது?’ அதை நம்புவதற்கு நம் காலத்தில் வாழ்கிற சிலருடைய அனுபவங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.

நம் காலத்துக்கும் கைகொடுக்கும் பைபிள் ஆலோசனைகள்

பைபிளை எழுதி முடித்து கிட்டத்தட்ட 2,000 வருஷங்கள் ஆகியிருந்தாலும், அது இன்றும் நமக்கு உதவுகிறது. எப்போதுமே திருப்தியாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். (பிரசங்கி 1:9) அந்த ஆசை நிறைவேற பைபிளில் இருக்கும் முத்தான ஆலோசனைகள் உதவும்.

நேர்மையாக நடப்பது

  • “நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.”—எபிரெயர் 13:18.

  • “திருடுகிறவன் இனி திருடாமல் இருக்க வேண்டும்; . . . பாடுபட்டு நேர்மையாக உழைக்க வேண்டும்.”—எபேசியர் 4:28.

மற்றவர்களோடு ஒத்துப்போவது

  • “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.”—1 கொரிந்தியர் 10:24.

  • “தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்.”—கொலோசெயர் 3:13.

முடிவுகளை எடுப்பது

  • “விவரம் தெரியாதவன் யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான். ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.

  • “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.”—நீதிமொழிகள் 22:3.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்