14 அதற்கு அவன், “உன்னை எங்களுடைய தலைவனாகவும் நீதிபதியாகவும் யாராவது நியமித்தார்களா? நீ அந்த எகிப்தியனைக் கொன்றுபோட்டது போல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயா?” என்று கேட்டான்.+ அதைக் கேட்டதும் மோசே பயந்துபோய், “நான் செய்தது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.