6 உன் வீடுகளும் உன் ஊழியர்கள் எல்லாருடைய வீடுகளும் எகிப்திலுள்ள எல்லாருடைய வீடுகளும் அவற்றால் நிரம்பும். உங்களுடைய அப்பாக்களும் தாத்தாக்களும் இன்றுவரை அப்படிப்பட்ட ஒன்றை இந்தத் தேசத்தில் பார்த்திருக்கவே மாட்டார்கள்’”+ என்றார்கள். பின்பு, மோசே பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப் போனார்.