13 அவனை யாரும் தொடக் கூடாது, கல்லையோ ஆயுதத்தையோ எறிந்துதான் கொல்ல வேண்டும். மலையைத் தொடுவது மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, கொல்லப்பட வேண்டும்’+ என்று சொல். ஆனால், ஊதுகொம்பின் சத்தம் கேட்கும்போது+ எல்லாரும் மலைக்குப் பக்கத்தில் வரலாம்” என்றார்.