16 “யெகோவாவின் ஜனங்களுடைய சார்பாக நாங்கள் கேட்கிறோம், ‘இஸ்ரவேலின் கடவுளுக்கு எதிராக ஏன் இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்தீர்கள்?+ நீங்கள் யெகோவாவின் வழியைவிட்டு விலகிப் போய்விட்டீர்கள். யெகோவாவின் கட்டளையை மீறி உங்களுக்காக ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக்கிறீர்கள்.+