28 அவர் அவர்களிடம், “என் பின்னால் வாருங்கள், உங்கள் எதிரிகளான மோவாபியர்களை யெகோவா உங்களுடைய கையில் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார். அதனால், அவர்கள் அவர் பின்னால் போய், மோவாபியர்கள் தப்பித்துப் போகாதபடி யோர்தானின் ஆற்றுத்துறைகளை கைப்பற்றினார்கள். யாருமே ஆற்றைக் கடப்பதற்கு அவர்கள் விடவில்லை.