34 ஆகாபின் ஆட்சிக் காலத்தில், பெத்தேலைச் சேர்ந்த ஈயேல் என்பவன் எரிகோவைத் திரும்பக் கட்டினான். அதற்கு அஸ்திவாரம் போட்டபோது அவனுடைய முதல் மகன் அபிராம் இறந்துபோனான். அதற்குக் கதவுகள் வைத்தபோது அவனுடைய கடைசி மகன் செகூப் இறந்துபோனான். நூனின் மகனான யோசுவா மூலம் யெகோவா சொன்ன வார்த்தை+ அப்போது நிறைவேறியது.