4 எருசலேமில் வாழ்ந்த யோசபாத் தன் மக்களை மறுபடியும் போய்ச் சந்திப்பதற்காகப் பயணம் செய்தார்; அதற்காக பெயெர்-செபாமுதல் எப்பிராயீம் மலைப்பகுதிவரை போனார்;+ தங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவாவைத் திரும்பவும் வழிபட ஆரம்பிக்கும்படி+ அவர்களை உற்சாகப்படுத்தினார்.