9 அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப் பார்த்தார்கள். “யூதர்கள் சோர்ந்துபோய் வேலையை விட்டுவிடுவார்கள், அவர்களால் மதிலைக் கட்டி முடிக்கவே முடியாது”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நான், “கடவுளே, எனக்குப் பலம் கொடுங்கள்”+ என்று ஜெபம் செய்தேன்.