47 செருபாபேலின்+ காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் வாழ்ந்த இஸ்ரவேலர்கள், பாடகர்களுக்கும்+ வாயிற்காவலர்களுக்கும்+ தினசரித் தேவையின்படி பங்குகள் கொடுத்தார்கள். லேவியர்களுக்குத் தர வேண்டிய பங்கையும் கொடுத்தார்கள்.+ லேவியர்கள் ஆரோனின் வம்சத்தாருக்குத் தர வேண்டிய பங்கைக் கொடுத்தார்கள்.