29 யூதாவின் ராஜா யோயாக்கீமிடம் இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீ சுருளை நெருப்பில் எரித்தாயே! பாபிலோன் ராஜா கண்டிப்பாக வந்து இந்தத் தேசத்தையும் இங்கிருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் ஒழித்துக்கட்டுவார்+ என்று இந்தத் தீர்க்கதரிசி எப்படி எழுதலாம் என்று கேட்டாயே!