4 இப்போது நான் உன்னுடைய கைவிலங்குகளைக் கழற்றி உன்னை விடுதலை செய்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உனக்கு விருப்பம் இருந்தால் நீ வரலாம். உன்னை நான் கவனித்துக்கொள்கிறேன். உனக்கு அங்கே வர விருப்பம் இல்லையென்றால் வர வேண்டாம். இந்தத் தேசத்தில் எங்கு போக விரும்பினாலும் நீ போகலாம்”+ என்று சொன்னான்.