16 பாறைகளின் நடுவே பாதுகாப்பாகக் குடியிருக்கிறவளே,
மிகவும் உயரமான குன்றின் மேல் உட்கார்ந்திருக்கிறவளே,
நீ எல்லாரையும் பயமுறுத்தி, அகங்காரமாக நடந்து மோசம்போனாயே!
கழுகைப் போல உயரத்திலே நீ கூடு கட்டினாலும்
அங்கிருந்து நான் உன்னைக் கீழே தள்ளுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.