4 பெத்தேலில் இருக்கிற பலிபீடத்துக்கு விரோதமாக உண்மைக் கடவுளின் ஊழியர் சொன்னதை யெரொபெயாம் கேட்டவுடன், பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்!”+ என்று கட்டளையிட்டார். உடனே அவருடைய கை விறைத்துப்போனது. அவரால் மறுபடியும் கையை மடக்க முடியவில்லை.+