-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
கை கழுவுவதில்லையே: கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக அவற்றைக் கழுவுவதைப் பற்றி இங்கே சொல்லப்படவில்லை; பாரம்பரியத்தின்படி தூய்மைச் சடங்கு செய்வதைப் பற்றியே இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கை கழுவாமல் சாப்பிடுவது ஒரு விபச்சாரியோடு உறவுகொள்வதற்குச் சமம் என்று பாபிலோனிய தால்முட் (சோட்டா 4ஆ) பிற்பாடு குறிப்பிட்டது. கை கழுவுவதை அசட்டை செய்கிறவர்கள் “இந்த உலகத்திலிருந்தே அழிக்கப்படுவார்கள்” என்றும் அது குறிப்பிட்டது.
-