-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
அதை நீயே சொல்லிவிட்டாய்: இது ஒரு யூத மரபுத்தொடர். கேள்வி கேட்டவர் சொன்ன ஒரு விஷயம் உண்மை என்பதை உறுதிப்படுத்துவதற்கு இயேசு இந்த மரபுத்தொடரைப் பயன்படுத்தினார். “நீயே அதைச் சொல்லிவிட்டாய், நீ சொல்வது உண்மைதான்” என்று இயேசு சொல்லாமல் சொன்னார். இயேசுவைக் காட்டிக்கொடுக்கப்போவதை யூதாஸ் தன் வாயாலேயே ஒப்புக்கொண்டதை இயேசு சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது. கொஞ்ச நேரம் கழித்து, யூதாஸ் அந்த அறையைவிட்டுப் போயிருப்பான்; அதன் பிறகுதான் எஜமானின் இரவு விருந்தை இயேசு ஆரம்பித்து வைத்தார். யோவா 13:21-30-ல் உள்ள பதிவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மத்தேயுவின் இந்தப் பதிவில், யூதாசைப் பற்றி அடுத்ததாக மத் 26:47-ல்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அவன் ஒரு கூட்டத்தோடு கெத்செமனே தோட்டத்துக்கு வந்ததாக அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.
-