அடிக்குறிப்பு
a குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில், பிரச்சினைகள் கட்டுக்கடங்காமல் போகையில் கணவனும் மனைவியும் பிரிந்து வாழ தகுந்த காரணங்கள் இருக்கலாம். (1 கொரிந்தியர் 7:10, 11) மேலும், வேசித்தனத்தின் நிமித்தம் மணவிலக்கு செய்துகொள்ள பைபிள் அனுமதிக்கிறது. (மத்தேயு 19:9) துணை அவிசுவாசியாக இருந்தால் மணவிலக்கு செய்துகொள்வதா வேண்டாமா என்பது ஒருவருடைய தனிப்பட்ட தீர்மானம். மற்றவர்கள் அத்தீர்மானத்தில் தலையிட்டு அதை மாற்ற முயற்சி செய்யக்கூடாது.—உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 158-61-ஐக் காண்க.