அடிக்குறிப்பு
a கலப்பு விசுவாச திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகளின் விஷயத்தில், ஸ்டீவன் கார் ரூபன், Ph.D. ரேய்சிங் சில்ட்ரன் இன் எ கான்டெம்ப்பரரி உவோர்ல்ட் என்ற தன்னுடைய புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “தாங்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை பெற்றோர் ஏற்க மறுத்து, குழப்பத்திலும், இரகசியமாகவும், மத விஷயங்களை தவிர்த்தும் வாழ்க்கையை நடத்துகையில் பிள்ளைகள் குழம்பிப்போய் விடுகின்றனர். பெற்றோர் தங்கள் சொந்த நம்பிக்கைகள், மதிப்பீடுகள், கொண்டாட்டத்தின் பாங்குகள் பற்றி ஒளிவுமறைவற்றவர்களாக, நேர்மையானவர்களாக, தெளிவாக இருக்கையில், பிள்ளைகள் மத சம்பந்தமான சூழலில் ஒருவிதமான பாதுகாப்போடும் சுய தகுதியோடும் வளர்ந்துவருகின்றனர், இவை அனைத்தையும் உள்ளிட்ட அவர்களுடைய சுய மதிப்பின் வளர்ச்சிக்கும் உலகில் அவர்களுக்குரிய நிலையைப்பற்றிய அறிவுக்கும் மிகவும் முக்கியமானதாய் இருக்கின்றன.”