அடிக்குறிப்பு
b ஆதாமுடைய பாவத்தை சரிசமமாக ஈடுசெய்ய, இயேசு பரிபூரண பிள்ளையாக அல்ல, ஆனால் பரிபூரண மனிதராக இறக்க வேண்டியிருந்தது. ஆதாம், தான் செய்யவிருந்த செயல் எவ்வளவு தவறானது என்பதையும் அதன் விளைவுகளையும் நன்கு அறிந்தும் வேண்டுமென்றே அப்பாவத்தை செய்தான் என்பதை ஞாபகம் வையுங்கள். ஆகவே இயேசு ‘கடைசி ஆதாமாகி,’ அந்தப் பாவத்தைப் போக்குவதற்கு யெகோவாவிற்கு உத்தமமாக நிலைத்திருக்கும் அறிவுப்பூர்வ, முதிர்ச்சிவாய்ந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது. (1 கொரிந்தியர் 15:45, 47) இவ்வாறு இயேசுவின் உத்தம வாழ்க்கை முழுவதும்—அவரது பலிக்குரிய மரணமும்கூட—‘ஒரே நீதியான செயலாக’ சேவித்தது.—ரோமர் 5:18, 19.