அடிக்குறிப்பு
b “பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்று லேவியராகமம் 19:18 சொல்கிறது. “உன் ஜனப்புத்திரர்,” ‘பிறன்’ என்ற வார்த்தைகள் யூதர்களை மட்டுமே குறிப்பதாக யூத மதத் தலைவர்கள் கற்பித்தார்கள். இஸ்ரவேலர் புறதேசத்தாரிலிருந்து விலகியிருக்க வேண்டுமென திருச்சட்டம் கட்டளையிட்டது. ஆனால், முதல் நூற்றாண்டு மதத் தலைவர்கள் கற்பித்த கருத்தை அது ஆதரிக்கவில்லை; அதாவது, யூதரல்லாதவர்கள் எல்லாருமே எதிரிகள், வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தை அது ஆதரிக்கவில்லை.