அடிக்குறிப்பு
a இயேசு இந்த உவமையில் யூதர்களுடைய அன்றாட பழக்கவழக்கங்களைக் குறிப்பிட்டார். உபசரிப்பதை யூதர்கள் ஒரு புனிதமான கடமையாகக் கருதினார்கள். பொதுவாக, ஒரு குடும்பத்தார் அன்றன்றைக்குத் தேவையான ரொட்டியைத்தான் சுட்டார்கள், அதனால் அது தீர்ந்துபோகும் பட்சத்தில் கடன் வாங்குவது சகஜமாக இருந்தது. அதுமட்டுமல்ல, அவர்கள் ஏழைகளாக இருந்தால், குடும்பத்திலுள்ள எல்லோரும் ஒரே அறையில் தரையில் படுத்துத் தூங்கினார்கள்.