அடிக்குறிப்பு
b சாராள் ஆபிரகாமுடைய ஒன்றுவிட்ட சகோதரி. தேராகுதான் இவர்கள் இரண்டு பேருக்கும் அப்பா. ஆனால், அம்மாதான் வேறு வேறு. (ஆதியாகமம் 20:12) இன்று இப்படிப்பட்ட உறவு முறையில் யாரும் திருமணம் செய்வதில்லை. ஆபிரகாம்-சாராளின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நம்மைவிட பலமடங்கு ஆரோக்கியமாக இருந்தார்கள். காரணம் என்னவென்றால், பரிபூரண ஆரோக்கியத்தோடு படைக்கப்பட்ட ஆதாம்-ஏவாள் இறந்து கொஞ்சக் காலத்திலேயே இவர்கள் வாழ்ந்தார்கள். ஆதாம்-ஏவாளுடைய வம்சத்தில் வந்த இவர்களுக்கும், நல்ல ஆரோக்கியம் இருந்தது. அதனால், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதால் வரும் உடல்நல பிரச்சினைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு வரவில்லை. ஆனால், 400 வருஷங்களுக்கு பிறகு வாழ்ந்த மக்களுக்கு அப்படிப்பட்ட ஆரோக்கியம் இருக்கவில்லை. அவர்களுடைய வாழ்நாள் குறைந்துவிட்டது. அதனால்தான் “இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொள்ளக் கூடாது” என்று மோசேயின் திருச்சட்டம் சொன்னது.—லேவியராகமம் 18:6.