அடிக்குறிப்பு
a இந்த உலகத்திலும் நம் வாழ்க்கையிலும் மோசமான சம்பவங்கள் நடக்கும்போது, நம்மால் மனஅமைதியோடு இருக்க முடியுமா? கண்டிப்பாக! அதற்கான மூன்று காரணங்களை 2019-க்கான வருடாந்தர வசனம் தருகிறது. அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பயத்திலேயே மூழ்கிவிடாமல் இருக்கவும் யெகோவாவை நம்பவும் இந்தக் கட்டுரை உதவும். அதனால், வருடாந்தர வசனத்தைப் பற்றி ஆழமாக யோசியுங்கள். முடிந்தால், மனப்பாடம் செய்யுங்கள். வரவிருக்கும் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தை இது தரும்.