அடிக்குறிப்பு
a சங்கீதக்காரரான தாவீதைப் போலவே நாமும் யெகோவாவை நேசிக்கிறோம், அவரைப் புகழ ஆசைப்படுகிறோம். சபைக் கூட்டங்களுக்கு வரும்போது யெகோவாமீது இருக்கிற அன்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு விசேஷ வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், கூட்டங்களில் பதில் சொல்வது நம்மில் சிலருக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கும் அப்படி இருக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் பயப்படுவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவும் அதைச் சமாளிக்கவும் இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.