அடிக்குறிப்பு
a நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்போமா அல்லது அவருக்குச் சேவை செய்யாதபடி சாத்தானின் வலையில் விழுந்துவிடுவோமா? இதற்கான பதில், நாம் எந்தளவு கடுமையாகச் சோதிக்கப்படுகிறோம் என்பதைப் பொறுத்து அல்ல, எந்தளவு நம் இதயத்தைப் பாதுகாக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. “இதயம்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? நம் இதயத்தைக் கறைபடுத்த சாத்தான் எப்படி முயற்சி செய்கிறான்? இதயத்தை நாம் எப்படிப் பாதுகாக்கலாம்? இந்த முக்கியமான கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை பதில் சொல்லும்.