அடிக்குறிப்பு
a யெகோவாவின் சாட்சிகளில் சிலர், வயதாவதால் வரும் கஷ்டங்களோடு போராடுகிறார்கள். வியாதியால் சிலர் பலவீனமாகிவிடுகிறார்கள். நாம் எல்லாருமே அவ்வப்போது களைத்துப்போய்விடுகிறோம். அதனால், வாழ்வு என்கிற ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதை நினைத்தாலே நம் எல்லாருக்கும் மலைப்பாக இருக்கலாம். சகிப்புத்தன்மையோடு எப்படி ஓடலாம் என்பதைப் பற்றியும், அப்போஸ்தலன் பவுல் சொன்ன வாழ்வுக்கான ஓட்டத்தில் எப்படி ஜெயிக்கலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.