அடிக்குறிப்பு
a 2022-க்கான வருடாந்தர வசனம் சங்கீதம் 34:10-லிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. “யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது” என்று அந்த வசனம் சொல்கிறது. இன்றைக்கு யெகோவாவை வணங்குகிற நிறைய பேர் பெரிய பணக்காரர்கள் கிடையாது. அப்படியிருக்கும்போது, அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? அப்படியென்றால், இந்த வசனத்தை எப்படி நாம் புரிந்துகொள்ள வேண்டும்? இதைப் புரிந்துகொள்வது எதிர்காலத்தில் வரப்போகிற கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க நமக்கு எப்படி உதவும்?