அடிக்குறிப்பு
a பயங்கரமான கஷ்டங்களைத் தாங்கிக்கொண்ட ஒருவர் என்று சொன்னாலே பெரும்பாலும் யோபுதான் நம்முடைய மனதுக்கு வருவார். அவருடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யெகோவாவைவிட்டு விலகுவதற்கு சாத்தானால் நம்மைக் கட்டாயப்படுத்த முடியாது என்று கற்றுக்கொள்கிறோம். அதோடு, நமக்கு நடக்கிற எல்லா விஷயத்தைப் பற்றியும் யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும் என்று கற்றுக்கொள்கிறோம். அதுமட்டுமல்ல, யோபுவின் கஷ்டங்களை எப்படி யெகோவா முடிவுக்குக் கொண்டுவந்தாரோ அதேபோல் நாம் படுகிற எல்லா கஷ்டங்களையும் ஒருநாள் முடிவுக்கு கொண்டுவருவார் என்று தெரிந்துகொள்கிறோம். இதையெல்லாம் நாம் முழுமையாக நம்புகிறோம் என்பதைச் செயலில் காட்ட வேண்டும். அப்போதுதான், நாம் ‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறோம்’ என்று சொல்ல முடியும்.