உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 20
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • காதேசில் மிரியாம் இறந்துபோகிறாள் (1)

      • பாறையை அடித்ததால் மோசே பாவம் செய்துவிடுகிறார் (2-13)

      • இஸ்ரவேலர்களுக்கு வழிவிட ஏதோம் ராஜா மறுக்கிறான் (14-21)

      • ஆரோன் இறந்துபோகிறார் (22-29)

எண்ணாகமம் 20:1

இணைவசனங்கள்

  • +எண் 13:26; 20:22; 33:36; உபா 2:14
  • +யாத் 15:20; எண் 26:59; மீ 6:4

எண்ணாகமம் 20:2

இணைவசனங்கள்

  • +யாத் 17:1

எண்ணாகமம் 20:3

இணைவசனங்கள்

  • +யாத் 17:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2019, பக். 12-13

எண்ணாகமம் 20:4

இணைவசனங்கள்

  • +யாத் 14:11; 17:3; எண் 16:13, 14; 21:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/1/2010, பக். 26

எண்ணாகமம் 20:5

இணைவசனங்கள்

  • +உபா 8:14, 15
  • +உபா 8:7, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2019, பக். 12-13

    காவற்கோபுரம்,

    1/1/2010, பக். 26

எண்ணாகமம் 20:6

இணைவசனங்கள்

  • +யாத் 16:10; எண் 14:10

எண்ணாகமம் 20:8

இணைவசனங்கள்

  • +யாத் 17:5, 6; சங் 78:15; 105:41; 114:8; ஏசா 48:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 35

எண்ணாகமம் 20:9

இணைவசனங்கள்

  • +யாத் 7:12, 19; எண் 17:10

எண்ணாகமம் 20:10

இணைவசனங்கள்

  • +சங் 106:32, 33

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    7/2018, பக். 14-15

    காவற்கோபுரம்,

    1/1/2010, பக். 26-27

எண்ணாகமம் 20:11

இணைவசனங்கள்

  • +1கொ 10:1, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/1/2010, பக். 26-27

எண்ணாகமம் 20:12

இணைவசனங்கள்

  • +எண் 27:12-14; உபா 1:37; 3:26; 32:51, 52; 34:4; யோசு 1:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/1/2010, பக். 26-27

    “வேதாகமம் முழுவதும்”, பக். 31

எண்ணாகமம் 20:13

அடிக்குறிப்புகள்

  • *

    மேரிபா என்பதன் அர்த்தம், “வாக்குவாதம்.”

இணைவசனங்கள்

  • +சங் 106:32, 33

எண்ணாகமம் 20:14

இணைவசனங்கள்

  • +நியா 11:17
  • +ஆதி 36:8; உபா 2:4; 23:7

எண்ணாகமம் 20:15

இணைவசனங்கள்

  • +ஆதி 46:6
  • +ஆதி 15:13; யாத் 12:40
  • +யாத் 1:11, 14

எண்ணாகமம் 20:16

இணைவசனங்கள்

  • +யாத் 2:23; 3:7
  • +யாத் 14:19; 23:20; 33:2

எண்ணாகமம் 20:17

இணைவசனங்கள்

  • +எண் 21:21, 22; உபா 2:26, 27

எண்ணாகமம் 20:19

இணைவசனங்கள்

  • +உபா 2:5, 6
  • +உபா 2:26, 28

எண்ணாகமம் 20:20

இணைவசனங்கள்

  • +நியா 11:17

எண்ணாகமம் 20:21

இணைவசனங்கள்

  • +உபா 2:8; நியா 11:18

எண்ணாகமம் 20:22

இணைவசனங்கள்

  • +எண் 21:4; 33:37

எண்ணாகமம் 20:24

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவான்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.

இணைவசனங்கள்

  • +எண் 33:38; உபா 32:50
  • +எண் 20:12; உபா 32:51, 52

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    7/2018, பக். 14-15

    காவற்கோபுரம்,

    1/1/2010, பக். 26-27

எண்ணாகமம் 20:26

இணைவசனங்கள்

  • +யாத் 28:2; 29:29
  • +யாத் 6:23; எண் 4:16

எண்ணாகமம் 20:28

இணைவசனங்கள்

  • +எண் 33:39; உபா 10:6; 32:50

எண்ணாகமம் 20:29

இணைவசனங்கள்

  • +உபா 34:8

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 20:1எண் 13:26; 20:22; 33:36; உபா 2:14
எண். 20:1யாத் 15:20; எண் 26:59; மீ 6:4
எண். 20:2யாத் 17:1
எண். 20:3யாத் 17:2
எண். 20:4யாத் 14:11; 17:3; எண் 16:13, 14; 21:5
எண். 20:5உபா 8:14, 15
எண். 20:5உபா 8:7, 8
எண். 20:6யாத் 16:10; எண் 14:10
எண். 20:8யாத் 17:5, 6; சங் 78:15; 105:41; 114:8; ஏசா 48:21
எண். 20:9யாத் 7:12, 19; எண் 17:10
எண். 20:10சங் 106:32, 33
எண். 20:111கொ 10:1, 4
எண். 20:12எண் 27:12-14; உபா 1:37; 3:26; 32:51, 52; 34:4; யோசு 1:2
எண். 20:13சங் 106:32, 33
எண். 20:14நியா 11:17
எண். 20:14ஆதி 36:8; உபா 2:4; 23:7
எண். 20:15ஆதி 46:6
எண். 20:15ஆதி 15:13; யாத் 12:40
எண். 20:15யாத் 1:11, 14
எண். 20:16யாத் 2:23; 3:7
எண். 20:16யாத் 14:19; 23:20; 33:2
எண். 20:17எண் 21:21, 22; உபா 2:26, 27
எண். 20:19உபா 2:5, 6
எண். 20:19உபா 2:26, 28
எண். 20:20நியா 11:17
எண். 20:21உபா 2:8; நியா 11:18
எண். 20:22எண் 21:4; 33:37
எண். 20:24எண் 33:38; உபா 32:50
எண். 20:24எண் 20:12; உபா 32:51, 52
எண். 20:26யாத் 28:2; 29:29
எண். 20:26யாத் 6:23; எண் 4:16
எண். 20:28எண் 33:39; உபா 10:6; 32:50
எண். 20:29உபா 34:8
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 20:1-29

எண்ணாகமம்

20 முதலாம் மாதத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் சீன் வனாந்தரத்துக்கு வந்துசேர்ந்து, காதேசில் தங்கினார்கள்.+ அங்குதான் மிரியாம்+ இறந்துபோனாள், அங்குதான் அவள் அடக்கம் செய்யப்பட்டாள்.

2 அங்கே ஜனங்களுக்குத் தண்ணீர் கிடைக்காததால்,+ அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடிவந்தார்கள். 3 அவர்கள் மோசேயோடு வாக்குவாதம் செய்து,+ “யெகோவாவின் முன்னால் எங்கள் சகோதரர்கள் செத்தபோதே நாங்களும் செத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! 4 யெகோவாவின் சபையாரை எதற்காக இந்த வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்? நாங்களும் எங்கள் ஆடுமாடுகளும் இங்கே சாவதற்காகவா?+ 5 எதற்காக எங்களை எகிப்திலிருந்து இந்தப் பயங்கரமான இடத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்?+ இங்கே பயிர்கள், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எதுவுமே இல்லை, குடிக்கத் தண்ணீர்கூட இல்லை”+ என்றார்கள். 6 உடனே, மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு வந்து, சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். அப்போது, யெகோவாவின் மகிமை அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.+

7 யெகோவா மோசேயிடம், 8 “உன் கையில் கோலை எடுத்துக்கொள். நீயும் உன் அண்ணன் ஆரோனும் ஜனங்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டுங்கள். அந்தக் கற்பாறை தண்ணீரைத் தரும்படி அவர்களுடைய கண் முன்னால் அதனிடம் பேசுங்கள். இப்படி, அந்தக் கற்பாறையிலிருந்து தண்ணீரை வரவைத்து, அதை ஜனங்களுக்கும் ஆடுமாடுகளுக்கும் குடிக்கக் கொடுங்கள்”+ என்றார்.

9 யெகோவா கட்டளை கொடுத்தபடி அவர் சன்னிதியில் இருந்த கோலை மோசே எடுத்துக்கொண்டார்.+ 10 பின்பு, மோசேயும் ஆரோனும் அந்தக் கற்பாறையின் முன்னால் சபையாரை ஒன்றுகூட்டினார்கள். மோசே அவர்களிடம், “அடங்காதவர்களே! இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீர் தர வேண்டுமா?” என்று சொல்லி,+ 11 கையை ஓங்கி, அந்தக் கோலால் கற்பாறையை இரண்டு தடவை அடித்தார். உடனே, அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. ஜனங்கள் குடித்தார்கள், அவர்களுடைய ஆடுமாடுகளும் குடித்தன.+

12 பிற்பாடு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரவேல் ஜனங்கள் முன்னால் நீங்கள் என்மேல் விசுவாசம் காட்டவில்லை, என்னைப் பரிசுத்தப்படுத்தவில்லை. அதனால், நான் கொடுக்கப்போகும் தேசத்துக்கு இந்தச் சபையாரை நீங்கள் கூட்டிக்கொண்டு போக மாட்டீர்கள்”+ என்றார். 13 அது மேரிபாவின்* தண்ணீர்+ என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், அங்குதான் இஸ்ரவேலர்கள் யெகோவாவுடன் வாக்குவாதம் செய்தார்கள். அங்குதான் அவர்களுக்கு முன்னால் கடவுள் தன்னைப் பரிசுத்தப்படுத்தினார்.

14 மோசே காதேசிலிருந்து ஏதோம் ராஜாவிடம் ஆட்களை அனுப்பி,+ “உங்கள் சகோதரன் இஸ்ரவேல்+ சொல்லி அனுப்பும் செய்தி இதுதான்: ‘நாங்கள் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும். 15 எங்கள் முன்னோர்கள் எகிப்துக்குப் போனார்கள்.+ அங்குதான் நாங்கள் பல வருஷங்கள் குடியிருந்தோம்.+ ஆனால், எங்களையும் எங்கள் முன்னோர்களையும் எகிப்தியர்கள் கொடுமைப்படுத்தினார்கள்.+ 16 நாங்கள் யெகோவாவிடம் கதறினோம்.+ அவர் அதைக் கேட்டு, ஒரு தூதரை அனுப்பி+ எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்திருக்கிறார். இப்போது நாங்கள் உங்களுடைய தேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் நகரத்தில் இருக்கிறோம். 17 உங்கள் தேசத்தின் வழியாகப் போக தயவுசெய்து எங்களுக்கு அனுமதி கொடுங்கள். உங்கள் வயல்கள் வழியாகவோ திராட்சைத் தோட்டங்கள் வழியாகவோ நாங்கள் போக மாட்டோம். எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்க மாட்டோம். வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் நேராக ராஜ பாதையிலேயே நடந்து, உங்கள் தேசத்தைக் கடந்துபோவோம்’”+ என்று சொன்னார்.

18 அதற்கு ஏதோம் ராஜா, “எங்களுடைய தேசத்தின் வழியாக நீங்கள் போகக் கூடாது, மீறினால் வாளுடன் உங்களைச் சந்திப்பேன்” என்றான். 19 அதற்கு இஸ்ரவேலர்கள், “நாங்கள் நெடுஞ்சாலை வழியாகப் போய்க்கொள்கிறோம். நாங்களும் எங்கள் ஆடுமாடுகளும் உங்கள் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைக் கொடுத்துவிடுகிறோம்.+ உங்கள் தேசத்தின் வழியாக நடந்து போவதற்கு மட்டும் அனுமதியுங்கள், வேறொன்றும் வேண்டாம்”+ என்றார்கள். 20 ஆனாலும் அவன், “நீங்கள் இந்த வழியாகப் போகக் கூடாது” என்றான்.+ அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டத்தோடும் பலம்படைத்த படையோடும் வந்தான். 21 தன் தேசத்தின் வழியாகப் போக இஸ்ரவேலர்களை ஏதோம் ராஜா அனுமதிக்காததால் இஸ்ரவேலர்கள் அவனைவிட்டு விலகிப்போனார்கள்.+

22 இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் காதேசைவிட்டுப் புறப்பட்டு ஓர் என்ற மலைக்கு வந்துசேர்ந்தார்கள்.+ 23 ஏதோம் தேசத்தின் எல்லையிலிருந்த அந்த மலையில் யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 24 “ஆரோன் இறந்துபோவான்.*+ இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுக்கப்போகிற தேசத்துக்குள் அவன் போக மாட்டான். மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில் நீங்கள் இரண்டு பேரும் என் கட்டளையை மீறிவிட்டீர்கள்.+ 25 ஆரோனையும் அவனுடைய மகன் எலெயாசாரையும் நீ கூட்டிக்கொண்டு இந்த ஓர் மலைமேல் ஏறி வா. 26 ஆரோனுடைய குருத்துவ அங்கிகளைக் கழற்றி+ அவனுடைய மகன் எலெயாசாருக்குப்+ போட்டுவிடு. அங்கே ஆரோன் இறந்துபோவான்” என்றார்.

27 யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். ஜனங்களுடைய கண் முன்னால் ஓர் என்ற மலைமேல் அவர்கள் ஏறினார்கள். 28 அங்கு ஆரோனுடைய குருத்துவ அங்கிகளைக் கழற்றி அவருடைய மகன் எலெயாசாருக்கு மோசே போட்டுவிட்டார். அதன்பின், அந்த மலை உச்சியில் ஆரோன் இறந்துபோனார்.+ பின்பு, மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தார்கள். 29 ஆரோன் இறந்துபோனதை இஸ்ரவேல் ஜனங்கள் தெரிந்துகொண்டபோது, அவர்கள் எல்லாரும் அவருக்காக 30 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்