உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எசேக்கியேல் முக்கியக் குறிப்புகள்

      • பாபிலோனில் கடவுள் தந்த தரிசனங்களை எசேக்கியேல் பார்க்கிறார் (1-3)

      • யெகோவாவின் பரலோக ரதத்தைப் பற்றிய தரிசனம் (4-28)

        • சூறாவளி, மேகம், தீ (4)

        • நான்கு ஜீவன்கள் (5-14)

        • நான்கு சக்கரங்கள் (15-21)

        • பிரகாசமான பனிக்கட்டி போல ஒரு தளம் (22-24)

        • யெகோவாவின் சிம்மாசனம் (25-28)

எசேக்கியேல் 1:1

அடிக்குறிப்புகள்

  • *

    எசேக்கியேலின் வயதைக் குறிக்கலாம்.

இணைவசனங்கள்

  • +எசே 3:15
  • +2ரா 24:12, 14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 23, 31

    காவற்கோபுரம்,

    6/15/1998, பக். 15

    11/1/1988, பக். 11

    “வேதாகமம் முழுவதும்”, பக். 133-134

எசேக்கியேல் 1:2

இணைவசனங்கள்

  • +2நா 36:9, 10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 31

    காவற்கோபுரம்,

    6/15/1998, பக். 15

    “வேதாகமம் முழுவதும்”, பக். 133

எசேக்கியேல் 1:3

அடிக்குறிப்புகள்

  • *

    அர்த்தம், “கடவுள் பலப்படுத்துகிறார்.”

  • *

    நே.மொ., “யெகோவாவின் கை அவர்மேல் வந்தது.”

இணைவசனங்கள்

  • +எரே 22:25
  • +எசே 3:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 30-31, 48-49

    “வேதாகமம் முழுவதும்”, பக். 133

எசேக்கியேல் 1:4

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மின்னல்கள்.”

இணைவசனங்கள்

  • +1ரா 19:11
  • +யாத் 19:18; சங் 97:2, 3
  • +எசே 8:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 30

எசேக்கியேல் 1:5

இணைவசனங்கள்

  • +எசே 10:9, 15; வெளி 4:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 43

    காவற்கோபுரம்,

    7/1/2007, பக். 12

    11/1/1988, பக். 11

எசேக்கியேல் 1:6

இணைவசனங்கள்

  • +ஏசா 6:2; எசே 10:20, 21; வெளி 4:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 43, 238

எசேக்கியேல் 1:7

இணைவசனங்கள்

  • +தானி 10:5, 6

எசேக்கியேல் 1:9

இணைவசனங்கள்

  • +எசே 10:11, 15

எசேக்கியேல் 1:10

இணைவசனங்கள்

  • +2சா 17:10; நீதி 28:1
  • +நீதி 14:4
  • +யோபு 39:27, 29
  • +எசே 10:14, 15; வெளி 4:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 43, 238

    காவற்கோபுரம்,

    12/1/1991, பக். 27

    11/1/1988, பக். 11

எசேக்கியேல் 1:11

இணைவசனங்கள்

  • +ஏசா 6:2

எசேக்கியேல் 1:12

இணைவசனங்கள்

  • +சங் 103:20; எபி 1:7, 14

எசேக்கியேல் 1:13

இணைவசனங்கள்

  • +தானி 7:9, 10

எசேக்கியேல் 1:15

இணைவசனங்கள்

  • +எசே 10:9-13; வெளி 4:7

எசேக்கியேல் 1:16

அடிக்குறிப்புகள்

  • *

    ஒருவேளை, ஒரு சக்கரத்தின் அச்சில் இன்னொரு சக்கரம் செங்கோணத்தில் வைக்கப்பட்டிருந்ததைக் குறிக்கலாம்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 36-37

    காவற்கோபுரம்,

    12/1/1991, பக். 27

எசேக்கியேல் 1:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 37

    காவற்கோபுரம்,

    12/1/1991, பக். 27-28

எசேக்கியேல் 1:18

இணைவசனங்கள்

  • +நீதி 15:3; சக 4:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 37

    காவற்கோபுரம்,

    12/1/1991, பக். 27

எசேக்கியேல் 1:19

இணைவசனங்கள்

  • +எசே 10:15-17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 40

எசேக்கியேல் 1:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 38-39

    காவற்கோபுரம்,

    12/1/1991, பக். 28

எசேக்கியேல் 1:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 38-39

எசேக்கியேல் 1:22

இணைவசனங்கள்

  • +எசே 10:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 38-39

    காவற்கோபுரம்,

    12/1/1991, பக். 28

எசேக்கியேல் 1:23

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “சிறகுகள் நேராக நீட்டிக்கொண்டிருந்தன.”

எசேக்கியேல் 1:24

இணைவசனங்கள்

  • +சங் 29:3; எசே 43:2; வெளி 14:2

எசேக்கியேல் 1:26

இணைவசனங்கள்

  • +யாத் 24:10; சங் 96:6; எசே 10:1
  • +1ரா 22:19; சங் 99:1; ஏசா 6:1; வெளி 4:2
  • +தானி 7:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 33, 39

எசேக்கியேல் 1:27

இணைவசனங்கள்

  • +எசே 8:2
  • +உபா 4:24; சங் 104:1, 2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 40

எசேக்கியேல் 1:28

இணைவசனங்கள்

  • +வெளி 4:3
  • +யாத் 24:16, 17; எசே 8:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2022, பக். 4

    விழித்தெழு!, 10/8/1995, பக். 15

    தூய வணக்கம், பக். 40

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எசே. 1:1எசே 3:15
எசே. 1:12ரா 24:12, 14
எசே. 1:22நா 36:9, 10
எசே. 1:3எரே 22:25
எசே. 1:3எசே 3:14
எசே. 1:41ரா 19:11
எசே. 1:4யாத் 19:18; சங் 97:2, 3
எசே. 1:4எசே 8:2
எசே. 1:5எசே 10:9, 15; வெளி 4:6
எசே. 1:6ஏசா 6:2; எசே 10:20, 21; வெளி 4:8
எசே. 1:7தானி 10:5, 6
எசே. 1:9எசே 10:11, 15
எசே. 1:102சா 17:10; நீதி 28:1
எசே. 1:10நீதி 14:4
எசே. 1:10யோபு 39:27, 29
எசே. 1:10எசே 10:14, 15; வெளி 4:7
எசே. 1:11ஏசா 6:2
எசே. 1:12சங் 103:20; எபி 1:7, 14
எசே. 1:13தானி 7:9, 10
எசே. 1:15எசே 10:9-13; வெளி 4:7
எசே. 1:18நீதி 15:3; சக 4:10
எசே. 1:19எசே 10:15-17
எசே. 1:22எசே 10:1
எசே. 1:24சங் 29:3; எசே 43:2; வெளி 14:2
எசே. 1:26யாத் 24:10; சங் 96:6; எசே 10:1
எசே. 1:261ரா 22:19; சங் 99:1; ஏசா 6:1; வெளி 4:2
எசே. 1:26தானி 7:9
எசே. 1:27எசே 8:2
எசே. 1:27உபா 4:24; சங் 104:1, 2
எசே. 1:28வெளி 4:3
எசே. 1:28யாத் 24:16, 17; எசே 8:4
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எசேக்கியேல் 1:1-28

எசேக்கியேல்

1 அது முப்பதாம் வருஷம்,* நான்காம் மாதம், ஐந்தாம் நாள். சிறையிருப்பிலிருந்த ஜனங்களோடு நானும் கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் இருந்தேன்.+ அப்போது வானம் திறந்தது. கடவுள் எனக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார். 2 யோயாக்கீன் ராஜா+ சிறையிருப்பிலிருந்த ஐந்தாம் வருஷம் அது. அந்த ஐந்தாம் நாளில், 3 ஆலய குருவாகிய பூஸியின் மகனான எசேக்கியேல்* என்ற எனக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது. அப்போது நான் கல்தேயர்களின்+ தேசத்திலுள்ள கேபார் ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்தேன். அங்கே யெகோவாவின் சக்தியால் நிரப்பப்பட்டேன்.*+

4 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, வடக்கிலிருந்து சூறாவளி வீசியது.+ ஒரு பெரிய மேகம் தெரிந்தது. அதிலிருந்து தீப்பிழம்புகள்* தெறித்தன.+ அதைச் சுற்றிலும் ஒரே வெளிச்சமாக இருந்தது. தீயின் நடுவில் வெள்ளியும் தங்கமும் கலந்த பளபளப்பான உலோகத்தைப் போன்ற ஏதோவொன்று தெரிந்தது.+ 5 அதற்கு நடுவில் மனுஷனைப் போன்ற நான்கு ஜீவன்கள்+ தெரிந்தன. 6 ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும்+ இருந்தன. 7 அவற்றின் பாதங்கள் நெட்டுக்குத்தாக இருந்தன. அவற்றின் உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் குளம்புகளைப் போல இருந்தன. பளபளப்பாக்கப்பட்ட செம்பைப் போல அவை பிரகாசித்தன.+ 8 அவற்றின் நான்கு சிறகுகளுக்குக் கீழேயும் மனுஷ கைகள் இருந்தன. அந்த நான்கு ஜீவன்களுக்கு முகங்களும் சிறகுகளும் இருந்தன. 9 அவற்றின் சிறகுகள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருந்தன. அந்த ஜீவன்கள் ஒவ்வொன்றும் திரும்பாமல் நேராகப் போயின.+

10 ஒவ்வொரு ஜீவனுக்கும் முன்பக்கத்தில் மனுஷ முகமும், வலது பக்கத்தில் சிங்க+ முகமும், இடது பக்கத்தில் காளை+ முகமும், பின்பக்கத்தில் கழுகு+ முகமும் இருந்தது.+ 11 இப்படித்தான் அவற்றின் முகச்சாயல் இருந்தது. அவற்றின் சிறகுகள் மேல்நோக்கி விரிந்திருந்தன. இரண்டு சிறகுகள் ஒன்றையொன்று தொட்டபடியும், மற்ற இரண்டு சிறகுகள் அவற்றின் உடலை மூடியபடியும் இருந்தன.+

12 கடவுளுடைய சக்தி எங்கெல்லாம் போகத் தூண்டியதோ அங்கெல்லாம் அவை நேராகப் போயின.+ அப்படிப் போகும்போது அவை திரும்பவில்லை. 13 அந்த நான்கு ஜீவன்களும் பார்ப்பதற்கு எரிகிற நெருப்புத் தணலைப் போல இருந்தன. பிரகாசமாக எரியும் தீப்பந்தங்களைப் போன்ற ஏதோவொன்று அவற்றுக்கு இடையே முன்னும் பின்னுமாகப் போய்க்கொண்டிருந்தது. நெருப்பிலிருந்து மின்னல் வெட்டியது.+ 14 அந்த ஜீவன்கள் அங்குமிங்கும் போனபோது மின்னல் அடிப்பது போலத் தெரிந்தது.

15 நான் அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, நான்கு முகங்களுள்ள அந்த ஒவ்வொரு ஜீவனுக்குப் பக்கத்திலும் ஒரு சக்கரம் தரையில் தெரிந்தது.+ 16 அந்தச் சக்கரங்கள் படிகப்பச்சைக் கல் போல ஜொலித்தன. நான்கு சக்கரங்களும் பார்ப்பதற்கு ஒரேபோல் இருந்தன. அவை ஒவ்வொன்றும், ஒரு சக்கரத்துக்குள் இன்னொரு சக்கரத்தை வைத்தது போல இருந்தன.* 17 திரும்பாமலேயே நான்கு திசைகளிலும் போக அவற்றால் முடிந்தது. 18 அந்தச் சக்கரங்களின் உயரத்தைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. அவற்றின் வட்டத்தைச் சுற்றிலும் கண்கள் இருந்தன.+ 19 அந்த ஜீவன்கள் போனபோது அந்தச் சக்கரங்களும் சேர்ந்து போயின. அந்த ஜீவன்கள் தரையிலிருந்து மேலே எழும்பியபோது அந்தச் சக்கரங்களும் மேலே எழும்பின.+ 20 கடவுளுடைய சக்தி எங்கே போகத் தூண்டியதோ அங்கே போயின. அந்தச் சக்தி எங்கெல்லாம் போனதோ அங்கெல்லாம் போயின. அந்த ஜீவன்களோடு சேர்ந்து சக்கரங்களும் மேலே எழும்பின. ஏனென்றால், அந்த ஜீவன்களைத் தூண்டிய சக்தி இந்தச் சக்கரங்களிலும் இருந்தது. 21 அந்த ஜீவன்கள் போனபோது இந்தச் சக்கரங்களும் போயின. அவை நின்றபோது இவையும் நின்றன. அவை தரையிலிருந்து எழும்பியபோது சக்கரங்களும் அவற்றோடு சேர்ந்து மேலே எழும்பின. ஏனென்றால், அந்த ஜீவன்களைத் தூண்டிய சக்தி இந்தச் சக்கரங்களிலும் இருந்தது.

22 அந்த ஜீவன்களின் தலைகளுக்கு மேலாக ஒரு தளம் பரந்து விரிந்திருந்தது. அது கண்களைப் பறிக்கும் பிரகாசமான பனிக்கட்டி போல அந்த ஜீவன்களின் தலைகளுக்கு மேலாக மின்னியது.+ 23 அந்தத் தளத்துக்குக் கீழே அவற்றின் சிறகுகள் ஒன்றுக்கொன்று எதிராக விரிந்திருந்தன.* ஒவ்வொரு ஜீவனுக்கும், உடலின் ஒரு பக்கத்தை மூடிக்கொள்ள இரண்டு சிறகுகளும் இன்னொரு பக்கத்தை மூடிக்கொள்ள இரண்டு சிறகுகளும் இருந்தன. 24 அந்த ஜீவன்கள் அங்குமிங்கும் போனபோது அவற்றின் சிறகுகளுடைய சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போலவும், சர்வவல்லமையுள்ளவரின் சத்தத்தைப் போலவும்,+ ஒரு போர்ப் படையின் சத்தத்தைப் போலவும் இருந்தது. அவை ஒரு இடத்தில் நின்றபோது சிறகுகளைக் கீழே தொங்கவிட்டன.

25 அவற்றின் தலைகளுக்கு மேலே இருந்த தளத்தின் மேலிருந்து ஒரு குரல் கேட்டது. (அவை ஒரு இடத்தில் நின்றபோது சிறகுகளைக் கீழே தொங்கவிட்டன.) 26 அவற்றின் தலைகளுக்கு மேலே இருந்த தளத்தின் மேல் நீலமணிக் கல்லைப் போல+ ஒன்று தெரிந்தது. அது பார்ப்பதற்குச் சிம்மாசனத்தைப் போல இருந்தது.+ மனுஷ சாயலில் ஒருவர் அந்தச் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார்.+ 27 அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகம் வெள்ளியும் தங்கமும் கலந்த உலோகத்தைப் போல, அதாவது நெருப்பு போல, பிரகாசித்தது.+ அதற்கு மேலாகவும் அப்படித்தான் பிரகாசித்தது. அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்குக் கீழாக நெருப்பு போலத் தெரிந்தது.+ அவரைச் சுற்றிலும் ஒரே வெளிச்சமாக இருந்தது. 28 அவரைச் சுற்றியிருந்த பிரகாசமான வெளிச்சம், மழை பெய்யும் நாளில் மேகத்திலே தோன்றுகிற வானவில்லைப் போல இருந்தது.+ அது யெகோவாவின் மகிமையைப் போல இருந்தது.+ அதைப் பார்த்தவுடன் நான் சாஷ்டாங்கமாக விழுந்தேன். அப்போது, ஒருவர் பேசும் சத்தம் கேட்டது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்