சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம்.
47 மக்களே, எல்லாரும் கை தட்டுங்கள்.
சந்தோஷ ஆரவாரத்தோடு கடவுளுக்கு வெற்றி முழக்கம் செய்யுங்கள்.
4 அவர் நமக்காக நம் சொத்தைத் தேர்ந்தெடுக்கிறார்.+
அவர் நேசிக்கிற யாக்கோபுக்குப்+ பெருமை சேர்க்கும் சொத்து அது. (சேலா)
6 கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்,* அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
நம் ராஜாவைப் புகழ்ந்து பாடுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
7 ஏனென்றால், பூமி முழுவதுக்கும் கடவுள்தான் ராஜா.+
அவரைப் புகழ்ந்து பாடுங்கள், விவேகத்தோடு* நடந்துகொள்ளுங்கள்.
8 கடவுள் எல்லா தேசங்களுக்கும் ராஜாவானார்.+
கடவுள் தன்னுடைய பரிசுத்த சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.
9 மக்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய ஜனங்களோடு கூடிவந்திருக்கிறார்கள்.
ஏனென்றால், இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்.*
கடவுள் மிக மிக உயர்ந்தவர்.+