சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; மஸ்கீல்.* அகிமெலேக்கின் வீட்டுக்கு தாவீது போயிருந்ததைப் பற்றி சவுலிடம் ஏதோமியனாகிய தோவேக் சொன்ன பிறகு+ தாவீது பாடிய பாடல்.
52 பலமுள்ளவனே, நீ செய்கிற அக்கிரமங்களைப் பற்றி ஏன் பெருமையடிக்கிறாய்?+
கடவுள் காட்டும் மாறாத அன்பு நாளெல்லாம் நீடிக்கும்+ என்பது உனக்குத் தெரியாதா?
3 நல்லதைவிட கெட்டதைத்தான் நீ அதிகமாக விரும்புகிறாய்.
உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதைத்தான் விரும்புகிறாய். (சேலா)
4 பொய் நாவு உள்ளவனே,
தீமையான வார்த்தைகளையே நீ பேச விரும்புகிறாய்.
5 அதனால், கடவுள் உன்னை ஒரேயடியாக வீழ்த்துவார்.+
உன்னைப் பிடித்து, உன் கூடாரத்திலிருந்து வெளியே இழுத்துப் போடுவார்.+
இந்த உலகத்திலிருந்தே உன்னை ஒழித்துக்கட்டுவார்.+ (சேலா)
7 “இதோ! கடவுளைக் கோட்டையாக நம்பாமல்,+
தன்னுடைய சொத்துப்பத்துகளையும்+ சதித்திட்டங்களையுமே
கோட்டையாக நம்பியவனுக்கு வந்த கதியைப் பாருங்கள்!” என்பார்கள்.
8 ஆனால், நான் கடவுளுடைய வீட்டிலே
செழிப்பான ஒலிவ மரத்தைப் போல இருப்பேன்.
கடவுளுடைய மாறாத அன்பை என்றென்றும் நான் நம்புகிறேன்.+
9 கடவுளே, நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்கள்.
அதனால், உங்களை என்றென்றும் புகழ்வேன்.+
உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவர்களுக்கு முன்பாக
உங்கள் பெயரில் நான் நம்பிக்கையோடு இருப்பேன்.+
ஏனென்றால், அது நல்லது.*