சங்கீதம்
மகத்துவத்தை ஆடைபோல் அவர் அணிந்திருக்கிறார்.
பலத்தை உடைபோல் உடுத்தியிருக்கிறார்.
யெகோவா அதை இடுப்புவார் போலக் கட்டியிருக்கிறார்.
பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
அதை அசைக்கவே முடியாது.
2 கடவுளே, பல காலத்துக்கு முன்பே உங்கள் சிம்மாசனம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.+
காலம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நீங்கள் இருக்கிறீர்கள்.+
3 ஆறுகள் பொங்கியெழுந்தன,
யெகோவாவே, ஆறுகள் பொங்கியெழுந்தன, சீறிப்பாய்ந்தன.
அவை பொங்கியெழுந்துகொண்டே இருக்கின்றன,
இரைச்சல் போட்டுக்கொண்டே இருக்கின்றன.
4 ஆனால், வெள்ளப்பெருக்கின் முழக்கத்தைவிடவும், மோதியடிக்கும் கடல் அலைகளைவிடவும்+
பலம்படைத்தவராக இருக்கும் யெகோவா பரலோகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.+
5 யெகோவாவே, உங்களுடைய நினைப்பூட்டுதல்கள் மிகவும் நம்பகமானவை.+
உங்களுடைய ஆலயம் என்றென்றும் பரிசுத்தத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.+